Published : 24 Jan 2019 11:10 AM
Last Updated : 24 Jan 2019 11:10 AM
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடும் மழை பெய்த தன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர் சூழ்ந்ததில் அம்மாநில நுகர்பொருள் வாணிப கழகத்துக்குச் (சப்ளைக்கோ) சொந்தமான கிடங்குகள் மற்றும் ஆலைகளில் இருப்பு வைக்கப் பட்டிருந்த லட்சக்கணக்கான டன் அரிசி மற்றும் நெல் மூட்டைகள் பயன்படுத்த இயலாத வகையில் சேதமடைந்தன. இந்த அரிசியை கால்நடைகளுக்கான தீவனமாகக் கூடப் பயன்படுத்தக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
சேதமடைந்த அரிசி மற்றும் நெல் ஆகியவற்றை ஏலம் எடுத்த நிறுவனம், அவற்றை திருச்சி மற் றும் கோவை மாவட்டங்களில் உள்ள சில நவீன அரிசி ஆலை களுக்கு அனுப்பி பாலிஷ் செய்து, வெவ்வேறு பெயர்களில் உணவுக் கான அரிசியாக மூட்டைகளில் அடைத்து மீண்டும் கேரள சந்தைகளுக்கு அனுப்ப திட்ட மிட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஒரு நவீன அரிசி ஆலையில், கேரளா வில் இருந்து கொண்டு வரப்பட்ட சேதமடைந்த அரிசியை பாலீஷ் செய்யும் பணிகள் கடந்த சில நாட் களாக இரவு பகலாக நடைபெற்று வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில், கேரள உளவுப் பிரிவு போலீஸார் 2 தினங்களுக்கு முன்பு துறையூர் வந்து அரிசி ஆலையில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், கேரளாவில் சேதமடைந்த அரிசி ஏறத்தாழ 30 ஆயிரம் மூட்டைகள், 100 லாரிக ளில் கொண்டு வரப்பட்டு இருப்பில் வைத்து, பாலீஷ் செய்யும் பணிகள் நடந்து வந்தது தெரிந்தது.
இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் பழனி சாமிக்கு கடந்த 21-ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக அரசின் உணவுப் பொருள் கடத்தல் தடுப் புப் பிரிவு போலீஸார் அந்த அரிசி ஆலையில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், துறையூர் அரிசி ஆலையில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலு வலர் சித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி, உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி பாரதிதாசன், ஆய்வாளர் சேரன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற் கொண்டனர். இதில், உணவுப் பொருட்கள் இருப்பு வைக்க அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் உணவுக்குப் பயன்படுத்த முடியாத பொருட்களை இருப்பு வைத்திருந் தது கண்டறியப்பட்டதாலும், ஆலை நிர்வாகத்தால் இது தொடர்பாக விளக்கம் எதுவும் அளிக்கப் படாததாலும் அந்த ஆலைக்கு சீல் வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT