Last Updated : 02 Nov, 2018 10:23 AM

 

Published : 02 Nov 2018 10:23 AM
Last Updated : 02 Nov 2018 10:23 AM

’பாவ்பாஜி’ விளம்பரத்தில் வழக்கறிஞர் உடையா? அமிதாபுக்கு பார் கவுன்சில் கடும் எச்சரிக்கையுடன் நோட்டீஸ்

விளம்பரப் படம் ஒன்றில் வழக்கறிஞர் போல் உடை அணிந்து வந்ததற்காக டெல்லி பார் கவுன்சில் கடும் எச்சரிக்கையுடன் அமிதாப் பச்சனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உணவுப்பொருள் நிறுவனம் ஒன்றின் பிராண்டுக்கு அமிதாப் அந்த விளம்பரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து யூ டியூப், ஊடக நிறுவனம் ஆகியவற்றுக்கும் பார் கவுன்சில் நோட்டீஸ்கள் சென்றுள்ளன.

வழக்கறிஞர் உடையை அணிந்து கொண்டு நடிக்கும் போது அதற்குரிய முன்னெச்சரிக்கைகளை எடுக்கவில்லை என்று பார் கவுன்சில் கூறுகிறது.

இந்த விளம்பரத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பார் கவுன்சில் எச்சரித்துள்ளது.

உடனடியாக இந்த விளம்பரத்தை ஒளிபரப்பு செய்வதை நிறுத்தவும், 10 நாட்களுக்குள் தங்களுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை எனில் கடும் நடவடிக்கை என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தில் அமிதாப் பச்சன் வழக்கறிஞர் உடையில் அறை ஒன்றில் அமர்ந்திருப்பார், அப்போது இருவர் அவர் அறைக்குள் நுழைந்து பாவ் பாஜியி அமிதாபுக்கு அளிப்பார், அதனை அவர் ருசித்து விட்டு தன் பிராண்டின் சுவையே பாவ்பாஜி சுவை என்று கூறுவார், இதில் வழக்கறிஞர் உடை அணிந்தது தவறாம்.

இதற்கு முன்பும் கூட அமிதாப் பச்சன் இவரது மகள் ஸ்வேதா பச்சன் ஆகியோர் நடித்த நகைக்கடை விளம்பரம் ஒன்றில் வங்கி ஊழியர்களை தவறாகச் சித்தரித்ததாக போராட்டங்கள் எழுந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x