Last Updated : 03 Jul, 2018 10:19 AM

 

Published : 03 Jul 2018 10:19 AM
Last Updated : 03 Jul 2018 10:19 AM

‘சம்மர்’ சாருமதி: படிக்கும்போதே படைத்த புதினம்

னி சம்மர் (summer) என்பது கோடையை குறிக்கும் சொல் மட்டுமல்ல, ஒரு நாவலும் கூட. எப்போதும் தன்னை மட்டுமே கவனிக்க வேண்டும், போற்ற வேண்டும் என்று உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணின் அடுத்தடுத்த மனப் போராட்டங்களை இந்த நாவல் விவரிக்கிறது.

இத்தனை கனமான ஒரு உளவியல் பிரச்சினையை கையில் எடுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாவலுக்கு சொந்தக்காரர் எழுத்தாளர் அல்ல. ஒரு கல்லூரி மாணவி. ஏ.வி. சாருமதி என்பது அவரின் பெயர்.

விழுப்புரம் தென்பெண்ணை கலை இலக்கியக் கூடல் சார்பில் எழுத்தாளர் துரை. ரவிக்குமார் அண்மையில் இந்த புத்தகத்தை வெளியிட்டார். சாருமதியை சந்தித்தோம். ஒரு பெண்ணின் மீது பெற்றோர் பராமரிப்பு மற்றும் பாசம் மற்றும் உணர்ச்சியை இதில் எழுதியிருப்பதாக சொல்லி தன் நாவல் கருவாகி உருவான விதத்தை விவரித்தார்.

“அந்தப் பெண் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகள் நிகழ்வதை கண்டு ஒரு கட்டத்தில் முடங்கிக் கிடக்கிறாள். சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகும் ஆண் நட்புகளுக்குள் உள்ள ரகசியங்களை அறிந்த பின் தெளிவடைந்து தன் தந்தையிடம் நெருக்கமாகி, அன்பை பொழிய முற்படுகிறாள். அப்போது என்ன நடக்கிறது என்பதே இந்த புதினத்தின் சாரம்” என நாவலின் உள்ளடக்கத்தை கூறிய அவர், இதன் இரண்டாம் பாகமும் வெளிவர உள்ளதாகத் தெரிவித்தார்.

கல்லூரியில் படிக்கும்போது, நாவலை எழுதத் தோன்றியது பற்றி கேட்டதற்கு, “6-ம் வகுப்பு படிக்கும் போதே டைரி எழுதும் பழக்கம் இருந்தது. அதன்பின் தமிழில் சின்னச்சின்னக் கவிதைகளை எழுத ஆரம்பித்தேன். என் சகோதரி அஜிதா பாரதி எழுதிய ஒரு நாவலை தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். ஏன் நாமும் எழுதக்கூடாது என்ற உந்துதல் ஏற்பட்டது. பின்னர் தனியார் கல்லூரியில் ஆங்கிலம் இலக்கியம் படித்தேன். ஷேக்ஸ்பியரில் தொடங்கி ஜான் கிரீன், பவுலோ கோஹெல்ஹோ ஆகியோர் என்னை கவந்தனர்.

என் எழுத்துகளில் ‘சுகர் கோட்டிங்’ வார்த்தைகளை அமைக்காமல் நேரடியாகவே அனைத்தையும் சொல்ல முயன்றுள்ளேன். அதுதான் எழுத்துக்கு வலு சேர்க்கும். எனக்கு பிடித்த மொழியில் எழுதும்போதுதான் என் உணர்வுகளை, நான் உணர்ந்ததை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். எனக்கு ஆங்கிலம் பிடிக்கும். அதனாலே நான் அதில் எழுதத் தொடங்கினேன்” என்றார்.

சாருமதியின் தாயார் விசயலட்சுமி தமிழாசிரியர். தந்தை விழி.பா. இதயவேந்தன் என்கிற அண்ணாதுரை தமிழ் சிறுகதை எழுத்தாளர். வாழையடி வாழை என்பதை மெய்ப்பித்திருக்கிறார் சாருமதி. சமூப் பொறுப்புள்ள படைப்புகளை அவர் தொடர்ந்து எழுத வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x