Published : 09 Jun 2018 10:10 AM
Last Updated : 09 Jun 2018 10:10 AM
பி
ராணிகளில் புனிதமாகக் கருதப்படுபவைகளில் யானைகளுக்கு முக்கிய இடம் உண்டு. காட்டு விலங்கானாலும் பழக்கப்படுத்திவிட்டால் அதுவும் செல்லப்பிராணியே. தன் பலத்தை அறி யாத விலங்கு என்ற அடைமொழி வரக்காரணமே அதன் பிரம்மாண்ட உருவத்துக்கும் சற்றும் பொறுத்தமில்லாமல் பாகனின் சொல்லுக்கு கீழ்படிந்து நடப்பதுதான். ஆசை இருந்தாலும் வீட்டில் வளர்க்க முடியாத யானைகளை கோயிலில்களில் மட்டுமே பார்க்க முடியும்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலிலும் யானை ஒன்று உள்ளது. அதன் சிகை அழகைப் பார்ப்பதற்கே கோயிலுக்கு வரும் கூட்டம் அதிகம். கோயில் கைங்கரியங்களை செய்வதற்காக கேரளாவில் இருந்து 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி மன்னார்குடிக்கு அழைத்து வரப்பட்டதுதான் இந்த மன்னார்குடி செங்கமலம்.
இக்கோயிலில் உள்ள செங்கமலத்தாயாரின் பெயரையே இங்குள்ள யானைகளுக்கும் வைப்பது வழக் கம் என்பதால் இந்த யானைக்கும் செங்கமலம் என பெயர் சூட்டப்பட்டது. இதற்கு முன்னர் இக்கோயிலில் இருந்த பழைய யானை செங்கமலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த யானைக்கு செங்கம்மா என பெயரிடப்பட்டு பின்னர் செங்கமலம் என பெயர் மாற்றப்பட்டது. இந்த செங்கமலத்துக்கும் சர்க்கரை நோய் தாக்குதல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே பிரத்தியேக உடற் பயிற்சிகளை யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்குவதற்கு முன்பே கவனத் தில் எடுத்துக்கொண்டு கோயில் நிர்வாகம் பயிற்சி வழங்கியது.
பாப் கட்டிங் செய்யப்பட்ட முடியு டன் வலம் வரும் யானையை ரசிப்பதற்கென்றே தனி கூட்டம் உள்ளது. செங்கமலத்துக்கு பாப் கட்டிங் வெட்டியது பாகன் ராஜாவின் தனிப்பட்ட ரசனை. அவரிடம் பேசினோம். “தின மும் வாக்கிங், ஷவர் பாத்தில் குளி யல் போடும். மற்ற யானைகளுக்கு இல்லாத வகையில் மிக நேர்த்தியாக வளர்ந்துள்ள அதன் தலை முடியை வாரிவிட்டு, திருநாமம் போட்டு அழகுபடுத்திய பின் கோயிலுக்கு வரும். மேலும் ராஜகோபால சுவாமி, செங்கமலத்தாயார் வீதியுலாவின்போது செங்கமலம் சாமரம் வீசும் அழகே தனி” என சிலாகிக்கிறார் ராஜா.
“போட்டோவுக்கு போஸ் கொடுப் பது என்றால் செங்கமலத்துக்கு அலாதிப்பிரியம். இதுவரை ஆயிரம் பேரா வது செல்ஃபி எடுத்திருப்பார் கள்” என்கிறார் துணை பாகன் கார்த்தி.
“மன்னார்குடிக்கு மதிலழகு என்பார்கள். தற்போது, மன்னார்குடிக்கு செங்கமலமும் அழகு என்ற சொல்லாடல் பரவி வருவது எங்கள் கோயிலுக்கு கிடைத்த பெருமை” என்கிறார் கோயில் நிர்வாக அதிகாரி சுகுமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT