Published : 16 Jun 2018 09:30 AM
Last Updated : 16 Jun 2018 09:30 AM

கம்ப்யூட்டர் சிபியூவில் மறைத்து ஆஸ்திரேலியாவிலிருந்து கடத்திய டிராகன் பல்லிகள்: திருப்பி அனுப்ப இலங்கை அரசு முடிவு

ஆஸ்திரேலியாவில் இருந்து கம்ப்யூட்டர் சிபியூவில் மறைத்து இலங்கைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட டிராகன் பல்லிகளை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக இலங்கைக்கு வந்த விமானத்தில் இருந்த பார்சல்களை கொழும்பு விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ஸ்கேன் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு கம்ப்யூட்டர் சிபியூவில் அசைவு தென்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுங்கத் துறையினர் சிபியூவை கழற்றி பார்த்தபோது, அதில் ஐந்து துணிப் பைகளில் 32 ஆஸ்திரேலிய டிராகன் பேர்டட் பல்லிகள் உயிருடன் இருந்தன.

இந்த பல்லிகளை கம்ப்யூட்டர் சிபியூவில் மறைத்து கடத்தி வந்துள்ளனர். இப்பல்லிகள் இலங்கையில் யாருக்கு அனுப்பப்பட்டுள்ளன என ஆய்வு செய்தபோது, அது போலி முகவரி எனத் தெரியவந்தது.

இதுகுறித்து இலங்கை சுங்கத்துறை செய்தி தொடர்பாளர் சுனில் ஜயரத்ன வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் செல்லப் பிராணியாக டிராகன் பல்லிகளை வளர்க்க அனுமதி இல்லை. இதனால், கொழும்பு விமான நிலைய சுங்கத்துறையின் வன விலங்கு பாதுகாப்புப் பிரிவினரின் பராமரிப்பில் உள்ள டிராகன் பல்லிகளை ஆஸ்திரேலியாவுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x