Published : 06 Jun 2018 11:59 AM
Last Updated : 06 Jun 2018 11:59 AM

‘இட்டேரி’ எனும் உயிர்வேலி பயிர்களுக்கு உண்மையான பாதுகாப்பு

மிழகத்தில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல், திருப் பூர் மாவட்டங்களில் அண்மைக் கால மாக விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை தானியங்களை அழிக்கும் மயில்கள் தான். கதிர் பிடிக்கும் தானியங்களை மயில்கள் சேதப்படுத்துவ தால் மகசூல் பாதிக்கிறது. இதற்காக பலர் விவசாயத்தையே கைவிடும் நிலைக்கும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஜெ.ராஜசேகரனின் வழிகாட்டுதலின்பேரில் மாணவர்கள் எம்.கே. ஆதிநாதன், என்.சந்தீப், எஸ்.அஸ்வின், கே.ஜெகத்குரு ஆகியோர் மயில்களின் பெருக் கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு குறித்து ஆசிரியர் ஜெ.ராஜசேகரன் கூறியது: ஆய்வு மேற்கொண்டபோதுதான், இட்டேரி எனும் உயிர் வேலிகளைப் பற்றி தெரிந்து கொண்டோம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் இந்த இட்டேரி உயிர் வேலிகளால் இணைக்கப்பட்டு இருந்தன.

இட்டேரி என்பது கொங்குநாட்டு வழக்குச் சொல். இருபுறமும் அடர்ந்த வேலி- நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டு வண்டித்தடம். இதுவே இட்டேரி எனப்படுகிறது. இந்த உயிர் வேலி என் பது ஒரு தனி உலகம்.

இதில் கள்ளி, முட் செடிகளுக்கு இடையே வேம்பு, மஞ்சக்கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிகள், பிரண்டை, கோவை போன்ற கொடிகள் மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புல்பூண்டுகள் நிறைந்திருக்கும். இவை உயிர்வேலியாய் இருந்து விவ சாய நிலங்களைக் காத்து வந்தன.

இங்கு கரையான் புற்றுகள், எலி வாங்குகள் நிறைய காணப்படும். நிழலும், ஈரமும் இலைக் குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் இருக்கும். இவற்றை உணவாக்கிக் கொள்ளும் வண்டுகள், நண்டுகள், பாம்பிராணிகள், உடும்புகள், ஓணான் கள் போன்ற உயிரினங்களும் இவற்றை உணவாக்கிக் கொள்ள பாம்புகள், பருந்துகள், நரிகள் போன்றவையும் இருந்தன.

இந்த வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓணான்கள், தவளைகள் ஆகியவை பயிர்களைச் சேதப்படுத்தும் பூச்சிகளை அழித்தொழித்தன. பாம்புகள், ஆந்தைகள் ஆகியவை எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையை பாம்புகளும் வல்லூறுகளும் கட்டுப்படுத்தின. பாம்புகளை மயில்கள் கட்டுப்படுத்தின. மயில்களின் எண்ணிக்கையை நரிகளும் காட்டுப் பூனைகளும் கட்டுப்படுத்தின. தற்போது அவைகளைக் காண்பது அரிதாகவிட்டது. இதனால் மயில்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது.

உயிர் வேலியை அழித்து காகம், குருவி கள் கூட கூடு கட்ட முடியாத கம்பிவேலிகள் அமைத்துவிட்டோம். இதனால் பல உயிரினங்கள் அழிந்துவிட்டன. சுற்றுச்சூழலை நம் சுயநலத்துக்காக அழித்ததன் விளைவே இப்பிரச்சினையின் ஆணிவேர். விவசாயிகளைக் காக்க நாம் செய்ய வேண்டியது இருக்கின்ற உயிர் வேலிகளைக் காப்பது, புதிய உயிர் வேலிகளை அமைப்பதும் தான் என்கிறார் ஆணித்தரமாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x