Published : 17 Aug 2014 10:12 AM
Last Updated : 17 Aug 2014 10:12 AM
உலக அளவிலான பாதுக்காக் கப்பட்ட சுறாக்கள் பட்டியலில் மேலும் ஐந்து வகை சுறா மற்றும் அனைத்து வகை திருக்கை வால் மீன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, வரும் செப்டம்பர் 14-ம் தேதியிலிருந்து மேற்கண்ட மீன்களை வேட்டையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
‘அழியும் ஆபத்தில் உள்ள உயிரின வர்த்தக சர்வதேச உடன்பாடு (CITES)’ , அமெரிக் காவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக மீன் வள மேலாண்மை அமைப்பு ஆகியவை இணைந்து மேற் கண்ட முடிவை எடுத்துள்ளன.
மொத்தம் உள்ள 400 வகை சுறாக்களில் இதுவரை 16 வகை சுறாக்கள், அழியும் நிலையிலுள்ள பாதுக்காக்கப்பட்ட மீன்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு பாஸ்கிங் சுறா (Basking shark), 2005-ம் ஆண்டு கிரேட் ஒயிட் சுறா (Great white shark), 2007-ம் ஆண்டு ஏழு வகை சா மீன்கள் (Saw fish) பாதுக்காக்கப்பட்ட சுறாக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
கடந்த 2013-ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த கூட்டத்தில் மேலும் ஐந்து வகை சுறாக்கள் மற்றும் அனைத்து திருக்கை வால் மீன்களை இந்தப் பட்டியலில் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டு, இந்தியா உள்ளிட்ட சைட்ஸின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ள நிலை யில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, போர்பீகல் சுறா, ஓசியானிக் ஒயிட் டிப் சுறா, ஸ்காலோப்டு ஹேமர் ஹெட் சுறா, ஸ்மூத் ஹேமர் ஹெட் சுறா, கிரேட் ஹேமர் ஹெட் சுறா ஆகிய ஐந்து வகை சுறாக்கள் மற்றும் அனைத்து வகை திருக்கை மீன்கள் ஆகியவை பாதுகாக்கப்பட்ட சுறாக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை நேற்று சைட்ஸ் அமைப்பு வெளியிட்டது.
வரும் செப்டம்பர் 14-ம் தேதியிலிருந்து இது அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ள அந்த அமைப்பு, அன்று முதல் மேற்கண்ட மீன்களை வேட்டையாடுவதை தடுக்கும்படி அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கண்ட மீன்களை பாதுகாப் பது, இனப்பெருக்கத் தன்மையை அதிகரிக்கும் சூழலை உருவாக் குவது, புதிய விதிமுறைகளை உருவாக்குவது குறித்த முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் ஜெர்மனியில் நடக்கிறது. தொடர்ந்து வங்கக் கடலில் இருக்கும் சுறாக்கள் மற்றும் திருக்கை வால் மீன்களின் வளம் கணக்கெடுப்பு மற்றும் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் வரும் 26 முதல் 28-ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT