Last Updated : 11 Apr, 2018 09:16 AM

 

Published : 11 Apr 2018 09:16 AM
Last Updated : 11 Apr 2018 09:16 AM

ஐபிஎல் டி 20 கிரிக்கெட்: கொல்கத்தா அணி 202 ரன்கள் விளாசல்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மேட்ச் ரெப்ரி மைதானத்துக்கு வந்து சேருவதில் காலதாமதம் ஏற்பட்டதால் டாஸ் சுமார் 13 நிமிடங்கள் தாமதம் ஆனது. இதைத் தொடர்ந்து போடப்பட்ட டாஸில் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

சென்னை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கேதார் ஜாதவ், மார்க் வுட் ஆகியோருக்கு பதிலாக சேம் பில்லிங்ஸ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா அணியில் மிட்செல் ஜான்சனுக்கு பதிலாக டாம் குர்ரன் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரேன், கிறிஸ் லின் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. தீபக் ஷகார் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தை கிறிஸ்லின் பவுண்டரிக்கும் கடைசி 2 பந்துகளையும் சுனில் நரேன் லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கும் விளாச மொத்தம் 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. அடுத்த ஓவரை வீசிய ஹர்பஜன் சிங், சுனில் நரேன் (12) விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். சுனில் நரேன், மிட் ஆப் திசையில் தூக்கி அடுத்த பந்தை சுரேஷ் ரெய்னா அற்புதமாக கேட்ச் செய்தார். இதையடுத்து ராபின் உத்தப்பா களமிறங்கினார்.

வாட்சன் வீசிய 3வது ஓவரில் ராபின் உத்தப்பா 2 பவுண்டரிகளும், கிறிஸ் லின் ஒரு பவுண்டரியும் விரட் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது

ஜடேஜா வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை பைன் லெக் திசையில் பவுண்டரி அடுத்த கிறிஸ் லின் அடுத்த பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து விளையாட முயன்ற போது ஸ்டெம்புகளை பறி கொடுத்தார். அவர் 16 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சேர்த்தார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 32 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து நித்திஷ் ராணா களமிறங்கினார். பவர்பிளே முடிவில் சென்னை அணி 64 ரன்கள் சேர்த்தது. உத்தப்பா 29, நித்திஷ் ராணா 16, தினேஷ் கார்த்திக் 26, ரிங்கு சிங் 2 ரன்கள் சேர்த்தனர்.

அதிரடி ஆட்டக்காரர் ஆந்த்ரே ரஸல் 36 பந்துகளில் 88 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 11 இமாலய சிக்ஸர்களும் அடங்கும். குர்ரன் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை தரப்பில் ஷேன் வாட்சன் 2 விக்கெட்களும், ஹர்பஜன், ஷர்துல் தாக்குர், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி ஆடத் தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x