Published : 25 Apr 2018 10:44 AM
Last Updated : 25 Apr 2018 10:44 AM
ஒ
வ்வொருவருக்குள் ளும் திறமைகள் இருக்கின்றன. அதை வெளிக் கொண்டு வருவதற்கான முயற்சியும் அதற் கான தருணமும் வாய்க்க வேண்டும். அப்படி ஒரு தருணத்தில் தன்னை உணர்ந்து கொண்டவர்தான் பாளையங்கோட்டை கல்லூரி மாணவர் ஹரிஹரநாராயணன். அவரது திறமை சாக்பீஸ்களில் ஒளிந்திருந்ததை கண்டறிந்தார். அப்புறம் என்ன, அவர் கையில் கிடைக்கும் சாக்பீஸ்கள் எல்லாம் சிற்பங்களாக மாறத் தொடங்கின.
பிஎஸ்சி முதலாமாண்டு படிக்கும் ஹரிஹரநாராயணன், வீட்டில் உபயோகப்படுத்தாமல் ஒதுக்கிவிட்ட சிறிய பொருட்களைக் கூட பயனுள்ளதாக மாற்றுகிறார். அப்படி கைவந்தது தான் சாக்பீஸில் சிலை செதுக்குவது. மிக நுண் சிற்பங்களை சாக்பீஸ் துண்டுகளில் உருவாக்குவதற்கு தனித்திறமை வேண்டும். ஹரிக்கு அது சாத்தியமானது. பாரதியார், பிள்ளையார், இந்திய வரைபடம், எய்ட்ஸ் தடுப்பு லோகோ உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை உருவாக்கி ஆச்சரியப்படுத்துகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக இவர் உருவாக்கிய சிற்பங்களை முகநூல் மற்றும் வாட்ஸ்அப் களில் பதிவேற்ற, இப்போது இவருக்கு உலகளாவிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இதே கலையில் கற்றுத்தேர்ந்த பலரின் ஆலோசனைகளும் இவருக்கு கிடைக்கிறது.
ஹரி நம்மிடம் கூறும்போது, “பலருக்கு இந்த நுண்கலையின் மதிப்பு தெரியவில்லை. பார்ப்பதற்கு சாக்பீஸ் சிற்பங்கள் மிக சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், ஒவ்வொரு சிற்பத்தை யும் உருவாக்க மணிக்கணக்கிலோ, நாள் அல்லது வார கணக்கிலோ கூட ஆகும். பாரதியார் உருவத்தை உருவாக்க ஒரு வாரம் உழைக்க வேண்டியிருந்தது. மிக நுட்பமான கலை இது” என்கிறார் இந்த சாக் சிற்பி.
தனது சாக்பீஸ் சிற்பங்களை பரிசுப் பொருளாக பலருக்கு கொடுத்திருக்கிறார். கவின்கலை கல்லூரியில் சேர்ந்து பயிலவும் திட்டமிட்டிருக்கிறார்.
கல்லில் மட்டுமல்ல சாக்பீஸிலும் கலை வண்ணம் காணும் ஹரிக்கு ஒரு குறை இருக்கிறது. அது, நுண்கலை திறன்படைத்தவர்களை ஊக்குவிக்க கல்வி நிறுவனங்களோ, அமைப்புகளோ, தனியாரோ முன்வருவதில்லை என்பதுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT