Published : 12 Feb 2018 11:37 AM
Last Updated : 12 Feb 2018 11:37 AM
ம
ரபணு மாற்றுப் பயிர்க ளால் உணவே விஷமாகி வரும் சூழலில், 350 பாரம்பரிய நெல் ரக விதைகள், 150 நவதானிய விதைகள், கருப்பு, வெள்ளை, மஞ்சள், பழுப்பு நிற தினை வகைகள் உள்ளிட்ட பயிர்களின் விதைகளை பத்திரப்படுத்தி காட்சிப்படுத்தி வருகிறார் க‘விதை‘ கணேசன். இவருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி. புதுச்சேரி ஆரோவில்லில் விதைக் கண்காட்சி நடத்தி வருகிறார். அவரிடம் பேசினோம்.
"தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை. பணி நிமித்தமாக நாடு முழுவதும் பயணிக்கும்போது பாரம்பரிய விதைகளை தேடத் தொடங்கினேன். இதன் விளைவாகத்தான் பாரம்பரிய ரகங்கள் கிடைத்தன. சேகரிப்பு விதைகளை நீண்ட நாட்கள் வைத்து கொள்ள முடி யாது அதை விவசாயிகளுக்கு தந்து பயிரிட்டு பார்த்து அதை சேகரிக்கிறேன். இயற்கை விவசாயம் தொடர் பாக எனக்குள் ஒரு தேடல் இருந்தது. நம்மாழ்வார் அய்யாவால் அந்த ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. பாரம்பரிய நெல் விதைகளை காப்பதுடன், அதை விவசாயிகளிடம் கொண்டு செல்ல வேண்டும என விரும்பினேன்.
அதற்கு ஒரே வழி ஊர் ஊராக விதைக் கண்காட்சி நடத்துவதுதான் என முடிவு செய்து இப் போது நடத்தி வருகிறேன்.
பாரம்பரிய நெல் ரகங்கள் நமக்கு கிடைத்த வரம். புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு. இது 220 நாளில் விளையும். காளான் நமக், கருங்குருவை, கருடன் சம்பா, தங்க சம்பா, வாசனை சீரக சம்பா என பல பாரம்பரிய ரகங்கள் உண்டு. ஒவ் வொரு ரகத்துக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு.
ஒரு ரகத்தில் பத்து நெல் விதை கள் கிடைத்தால் போதும். அதை விதைத்து, அதில் இருந்து விதைக்க, விதைக்க ஆயிரக்கணக்கில் விதை நெல்லை உருவாக்கி விடுவேன்.
பாரம்பரிய நெல் விதைத்தால் விளைச்சல் காலம் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் விதைப்பதில்லை. ஆனாலும் இதன் மருத்துவக் குணத்தால் முக்கியமான பத்து நெல் விதைகளுக்கு வெளிநாட்டில் நல்ல மவுசு உள்ளது. எனக்கு தெரிந்து சிலர் பாரம்பரிய நெல் விதைத்து, அறுவடை செய்து வெளிநாடுகளுக் கும் ஏற்றுமதி செய்கிறார்கள்.
நமது நாட்டில் குறுகிய காலத் தில் பலன் தரும் ரகங்கள் அறிமுகமானது பஞ்சத்தை போக்கதான். அதற்காக நமது பாரம்பரியத்தை நாம் மறக்கக் கூடாது. பாரம்பரிய விதைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கம். அதுவே எனக்கு விருதுகளையும் நிறைவான வாழ்வையும் தந்துள்ளது என்று கூறி முடித்தார் கவிதை கணேசன் என்கிற விதை கணேசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT