Last Updated : 09 Feb, 2018 10:13 AM

 

Published : 09 Feb 2018 10:13 AM
Last Updated : 09 Feb 2018 10:13 AM

இரங்கல் செய்திப் பலகை

றந்தவர்களுக்காக ‘கண்ணீர் அஞ் சலி’ சுவரொட்டிகள், பேனர்கள் வைப்பது மறைவு செய்தியைச் சொல்லும் சாதனமாகிவிட்டது. இதற்காக சுவரொட்டிகளை ஒட்டி சுவர்களை அசுத்தமாக்குவதும் பேனர்களை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்வதும் இப்போது வழக்கமாகி விட்டது.

இதை தவிர்க்க மாற்று வழியை சிந்தித்த கிருஷ்ணகிரி காவேரிப்பட்டணம் ரோட்டரி சங்கத்தினர், பேருந்து நிலையம் எதிரிலும் பாலக்கோடு சாலை சந்திப்பிலும் 2 பெரிய நிரந்தர தகவல் பலகைகளை நிறுவினர். இதையடுத்து, இந்த இடம் மறைவுச் செய்தியை அறிவிக்கும் தகவல் பலகையாக மாறிவிட்டதாக கூறுகிறார் ரோட்டரி சங்க தலைவரும் ஓய்வுபெற்ற கடற்படை பொறியாளருமான வெங்கட்ரமணன்.

எல்லோரும் ஆரோக்கியத்துடன் இருப்பதும் இந்த தகவல் பலகைக்கு வேலை இல்லாமல் போக வேண்டும் என்பதும்தான் நமது விருப்பம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x