Published : 11 Sep 2017 10:27 AM
Last Updated : 11 Sep 2017 10:27 AM

இப்படிக்கு இவர்கள்: அகராதிப் பயன்பாட்டை அதிகமாக்குவோம்!

அகராதிகள் மொழிக் களஞ்சியங்கள், மொழி வளத்தின் வெளிப்படையான சான்றுகள். அதனால்தான், இத்தாலி நாட்டிலிருந்து தமிழகம் வந்த வீரமாமுனிவர் சதுரகராதியை உருவாக்கினார். அகராதிகளின் பயன்பாட்டை நாம் இன்னும் முழுமையாக அறியவில்லை. தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் புரியாமல் மனப்பாட மண்டபங்களில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் ஒரு தலைமுறைக்கு முன்னால், தமிழின் மொழி வளத்தை இளைய தலைமுறைக்கு உணர்த்த அகராதிப் பயன்பாட்டை வகுப்புகளில் கட்டாயமாக்குதல் அவசியம். சிங்கப்பூரின் வானூர்தி நிலையத்தில் ‘வருகை’ என்று அழகான தமிழில் பலகைகள் உள்ள நிலையில், தமிழகத்தில் இன்னும் அந்நிலை வரவில்லை என்பது வருந்தத் தக்க நிகழ்வுதான்.

60-களில் யுனெஸ்கோ கூரியரின் ஆசிரியர் மணவை முஸ்தபா, அவ்விதழ் கையாண்ட கலைச் சொற்களைத் தொகுத்து ‘அறிவியல் தமிழ்க் கலைச் சொற்கள்’ எனும் நூலை வெளியிட்டார். அதோடு அறிவியல், தொழில்நுட்பம், கணினி, மருத்துவம் சார்ந்த எட்டு அகராதிகளைத் தமிழில் வெளியிட்டார். தமிழ் வளர்ச்சித் துறை அம்முயற்சிகளை இன்னும் அதிகமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மக்களின் பயன்பாட்டுச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைத் தினமும் ‘தி இந்து’ தர வேண்டும். கலைச் சொற்களும் அகராதிகளும் மொழியின் வளம்.

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

விழிப்புணர்வு வேண்டும்

‘பனைமரமே, பனைமரமே!’ நுாலின் விமர்சனம் செப்டம்பர் 9 இதழில் படித்தேன். கிராம நிலங்கள் அழிந்து நகரமயமாகும்போது, மனிதர்களால் பிடுங்கி எறியப்படுகிறது. பனங்கிழங்கு நட்டு மீண்டும் பலன்பெற 15 வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும். தமிழகத்தின் மாநில மரத்துக்கு உரிய பாதுகாப்பு இல்லை. முன்பு ஆர்.எஸ்.ஜேக்கப் ‘பனையண்ணன்’ என்ற நூலை எழுதினார். பனை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இம்மாதிரியான கட்டுரைகள் பேருதவி புரியும்.

- எஸ்.மைக்கேல் ஜீவநேசன், சென்னை.

பதில் ஏற்புடையதாக இல்லை

மா

ணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, நடிகர் சூர்யா எழுதியிருந்த கட்டுரைக்கு தமிழக பாஜக தலைவர் தமிழசை சவுந்தரராஜன் கொடுத்திருக்கும் பதில்கள் ஏற்புடையதாக இல்லை. அகரம் பவுண்டேஷன் மூலமாகக் கிடைத்த அனுபவத்தை வைத்து அவர், தமிழகத்தில் அனைவருக்கும் சமமான கல்வியைப் போதிப்பதில்லை என்றும் நீட் தேர்வும் அது தொடர்பான பிரச்சினைகளும் நம் கல்விச் சூழலின் கோரமான ஒரு பகுதியை மட்டுமே காட்டுகிறது என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். கல்விமுறையில் மாற்றங்கள் செய்வது குறித்து தகுந்த பதில்களை தமிழிசையால் தர முடியாவிட்டால், அவர் அமைதியாகவாவது இருந்திருக்கலாம்.

- இராம்சே, கரூர்.

அவர்கள் கேட்பது நியாயம்தானே!

ந்து வருடங்கள் சேவை (?) செய்த எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் ஓய்வூதியம் பெறும்போது, 20 ஆண்டுகளுக்கு மேல் வேலைசெய்யும் ஊழியர்கள் ஓய்வூதியம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. அவர்கள் கேட்பது நியாயம்தானே. என்ன செய்யப்போகின்றன மத்திய - மாநில அரசுகள்.

- சாவித்திரி, திருவாரூர்.

கல்வி என்பது...

செ

ப்.8 அன்று வெளியான ‘மரமேறாத மீன்கள்’ எனும் கட்டுரை படித்தேன். புவியியல் அமைப்பு ரீதியாகவும், கலாச்சார அமைப்புரீதியாகவும் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட இந்தியா போன்ற நாட்டில், மாணவர்களின் திறமைகளை, ஒரே சமமான சோதனையின் (நீட்) மூலம் கண்டறிய முடியாது என்பதைப் பல்வேறு எடுத்துக்காட்டுகளின் மூலம் விளக்கியிருப்பது சிறப்பு. அடிப்படை விஷயங்களுக்கெல்லாம் உடனடித் தீர்வு காணப்படாத பட்சத்தில், கல்வி என்பது ‘கருப்புப் பூனையை இருட்டில் தேடுவது’ போன்றதாகத் தானிருக்கும்.

- வி.பாஸ்கர், அலங்காநல்லூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x