Published : 01 Sep 2017 09:49 AM
Last Updated : 01 Sep 2017 09:49 AM
தலித்துகளும் கல்வியும்
ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான, ‘எம்.சி.ராஜா: மறக்கப்பட்ட இன்னொரு தமிழ் ஆளுமை!’ கட்டுரையின் வாயிலாக மயிலை சின்னத்தம்பி ராஜா தலித்துகளுக்கு ஆற்றிய அரும்பணியை அறிந்தேன். தலித் விடுதலைக்குக் கல்வியே முதல் தேவை என்பதை உணர்ந்து, சென்னையில் பல இடங்களில் இரவுப் பள்ளிகளையும், விடுதிகளையும் தொடங்கியதோடு, ‘எம் மக்களுக்கு இலவசக் கல்வி கற்க அனுமதி தாருங்கள்’ என ஆட்சியாளர் களிடம் அவர் கோரிக்கை விடுத்திருப்பது நெகிழச்செய்கிறது. இன்று தலித் என்ற அடையாளத்தை வைத்து அரசியல் செய்வோர், ஆதிதிராவிட இனத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்வோர், எத்தனை கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார்கள் அல்லது ஏற்படக் காரணமாக இருந்தார்கள்? மறக்கப்பட்ட தலைவர் எம்.சி.ராஜாவை இனியேனும் எல்லா இடங்களிலும் அடையாளப்படுத்துவதுடன், அவரது வழியில் தலித் மக்களின் கல்விக்குப் பணியாற்ற வேண்டியது நம் எல்லோருடைய முதல் கடமையாகவும் இருக்க வேண்டும்.
-கோட்டைசெல்வம், கோட்டைக்காட்டுவலசு, ஈரோடு.
கதை சொல்லும் தாத்தா
தஞ்சாவூர்க் கவிராயரின் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தன் பேரனை மடியில் அமர்த்திக்கொண்டு கதை சொல்லும் தாத்தாவின் கனிவும், நெருக்கமும் அவருடைய கட்டுரைகளில் தெரிகின்றன. சுஜாதா சிறுகதைகளைப் போல, இக்கட்டுரைகளின் முடிவுப் பகுதியும் ஒரு தெறிப்புடன் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. படித்து முடித்த கொஞ்சம் நேரம் வரையில் மனது அந்த சுகத்திலேயே மிதந்துகொண்டிருக்கிறது. இவர், தஞ்சாவூர்க் கவிராயர் அல்ல, நம் ‘நெஞ்சத்தைப் பிழிராயர்’.
- டி.ராஜசேகரன், கிராப்பட்டி.
பசுமையை மீட்டெடுப்போம்!
தியடோர் பாஸ்கரன் எழுதிய, ‘சென்னை எனும் பசுமைவெளி’ (ஆக. 22) கட்டுரை வாசித்தேன். ‘சென்னையைப் போல் இயற்கை வளங்கள் நிறைந்த நகரங்கள் மிகக் குறைவு. ஆனால், தற்போது மக்கள்தொகைப் பெருக்கத்துக்கேற்ப நீர்நிலை கள் உயர்ந்துள்ளனவா... தொழிற்சாலைகளின் நச்சுப் புகையை ஈடுகட்டும் அளவுக்கு மரங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளனவா என்றால், ஏமாற்றமே மிஞ்சு கிறது. சென்னையின் பசுமையை மீட்டெடுப்பது முடியாத காரியமல்ல. அரசு செயலில் இறங்க வேண்டும், மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
- க.சுப்பிரமணியன், ஜாம்புவானோடை.
நம் குட்டிகளை விழுங்கும் திமிங்கிலம்!
ஆக.25-ல் ‘இங்கே இவர்கள் இப்படி’ பகுதியில் வெளியான, ‘ப்ளுவேல்’ எனும் ஆன்லைன் விளையாட்டைப் பற்றிய கட்டுரை கண்டு மனம் பதறியது. சுய நரபலியிடும் இந்த ‘கொலையாட்டில்’ இருந்து பச்சிளம் பாலகர்களை மீட்கப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், உளவியலாளர்கள் அனைவருக்கும் பங்கிருக்கிறது. பெற்றோர்கள் தினமும் தங்கள் குழந்தைகளுடன் ஒரு மணி நேரமாவது மனம்விட்டுப் பேச வேண்டும். குறிப்பாக, ஒற்றைக் குழந்தையை வைத்துள்ள பெற்றோர் கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை இச்செய்தி உணர்த்துகிறது. சம்பாத்தியம் மட்டுமேவா வாழ்க்கை?
- தவமணி கோவிந்தராசன், சென்னை.
படிப்பினை தந்த கட்டுரை
ஒரே திரைப்படத்தில் அகில இந்தியாவையும் தமிழகத்தை நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்த மேதை எஸ்.எஸ்.வாசன் பற்றிய, திரைச் சிகரம் தொட்ட எஸ்.எஸ்.வாசன் கட்டுரை (ஆக.28) வாசித்தேன். 4 வயதிலேயே தந்தையை இழந்த வாசன், சாதனையாளரான கதையை விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சொன்ன கட்டுரையாளருக்குப் பாராட்டுகள். படிப்பு, அறிவு, ஆற்றல், துணிவு, உழைப்பு, பொய் புரட்டு இல்லாத தொழில்முறை ஒருவரை உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் என்ற படிப் பினையை வாசன் வாயிலாக இன்றைய தலைமுறை யினருக்குச் சொன்ன ‘தி இந்து’வுக்கு நன்றி.
- தி.க.மாரிமுத்து, புதுக்கோட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT