Published : 26 Sep 2017 10:11 AM
Last Updated : 26 Sep 2017 10:11 AM

இப்படிக்கு இவர்கள்: அகதிகளும் இந்தியாவும்

அகதிகளும் இந்தியாவும்

ரோ

ஹிங்கியா முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றும் மத்திய பாஜக அரசின் முடிவு குறித்த தலையங்கம் (செப்.22) விரிவான தளத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தியா அந்த அகதிகள் பிரச்சினையை மத அடிப்படையில் மட்டுமே பார்ப்பது கண்கூடாகத் தெரிகிறது. உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் பட்டியலில் இந்தியா அமர்ந்துள்ளது. ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் கோருகிறது. ஐநா அமைதிப் படையில் பங்களிப்பு செய்து வருகிறது. ரோஹிங்கியா பிரச்சனையை இந்தியா கை கழுவினால் அதன் உலக அந்தஸ்து கேள்விக்குறியாகிவிடும். உள்நாட்டின் எதிர்ப்புகளுக்கிடையே கூட சிரியாவின் அகதிகளை ஏஞ்சலா மெர்கல் ஏற்றுக் கொண்டதை இந்தியா காணத் தவறக் கூடாது!

-சிவ.ராஜ்குமாரர், சிதம்பரம்.

எல்லாக் குறள்களையும் எழுதுக

மது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மொத்தம் ஏழு கோட்டங்களாக இயங்குகிறது. 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடுகின்றன. ஆனால், அத்தனைப் பேருந்துகளினுள்ளும் எழுதியிருக்கின்ற திருக்குறள்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டாது. திரும்பத் திரும்ப இந்த நூறு குறள்களுக்குள் ஒன்று தான் மாற்றி மாற்றி பதிவிடப்பட்டிருக்கும். அதற்குப் பதிலாக அனைத்துக் குறள்களையும் பேருந்துகளில் பதிவிடலாம். பேருந்துகளில் பயணப்படுகின்ற ஒன்றரை கோடி பேர்களின் கண்களில் அனைத்து குறள்களும் படுவதற்கான வாய்ப்பாக இருக்கும். முயற்சிக்குமா போக்குவரத்துக் கழகங்கள்?

-காஞ்சி சாந்தன், அகவை.

முழு உண்மையில்லை

வோதயா பள்ளிக்கு ஆதரவாக அதன் முன்னாள் முதல்வர் ஒய்.ஆர்.ஜான்சன் எழுதிய கட்டுரையை (செப்.24) வாசித்தேன். இப்பள்ளியால் கிராமப்புற மாணவர்கள் மிகுந்த பயன்பெறுவர் என்று கூறுவது சரியல்ல. அப்பள்ளியில், 75% இடங்கள் கிராமப்புற மாணவர்களுக்குத்தான் என்றாலும், கிராமப்பகுதியில் குடியிருப்பவர்கள், கிராமத்திலேயே தங்கியிருந்து படிப்பவர்கள் மட்டுமே கிராமப்புற மாணவர்கள் அல்ல. கிராமப் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் படிப்பவர்கள் எல்லோருமே சட்டப்படி கிராமப்புற மாணவர்கள்தான். நவோதயாப் பள்ளிகள் அறிமுகமான 1986 காலகட்டத்தில் இது பொருந்திவரலாம். ஆனால், கிராமப்புறத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமே இயங்கி வந்த காலம் அது. கல்வித் துறையில் தனியார் கோலோச்சுகிற இக்காலகட்டத்தில் நிலைமை முற்றிலும் வேறு. பெரும்பாலான தனியார் பள்ளிகள், அதிநவீனப் பள்ளிகள் எல்லாம் நகர் எல்லைக்கு வெளியே கிராமங்களில்தான் அமைந்துள்ளன. அங்கு படிப்பவர் எல்லாம் நவோதயா விதிப்படி கிராமப்புற மாணவர்கள்தான் என்றாகிவிடுகிறது. அத்துடன், பட்டியல், பழங்குடி இனத்தனவருக்கு இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என்று கூறுவதும் முழு உண்மையல்ல. மாவட்டத்தில் உள்ள பட்டியல் வகுப்பினரின் மக்கள்தொகை சதவீதம், அவர்களின் தேசிய சதவீதத்தைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே அந்த இடஒதுக்கீடு என்கிற நிபந்தனை இருக்கிறது. நவோதயா பள்ளிகளைக் கொண்டுவருவதில் தவறில்லை. ஆனால், அதற்காக இப்படியான காரணங்களைச் சொல்வதுதான் நெருடலாக இருக்கிறது.

-நா.இராஜா, ஆசிரியர், மின்னஞ்சல் வழியாக.

திருத்தம்

டந்த செப். 24 அன்று ‘தி இந்து’வின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் ‘ஆங்கிலத்தில் உயிர்த் துடிப்புடன் அகநானூறு!’ என்ற கட்டுரை வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரையில் அகநானூற்றின் ‘களிற்றியானை நிரை’, ‘மணிமிடைபவளம்’ ஆகிய பிரிவுகளின் பாடல் எண்ணிக்கையைக் குறிப்பிடும் இரண்டாவது பத்தியில் பிழை நேர்ந்துவிட்டது. ‘முதல் 120 பாடல்களை களிற்றியானை நிரை எனவும், அடுத்த 180 பாடல்களை மணிமிடைபவளம் எனவும்’ என்று திருத்தி வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். பிழைக்கு வருந்துகிறோம்.

-ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x