Published : 14 Sep 2017 11:13 AM
Last Updated : 14 Sep 2017 11:13 AM

இப்படிக்கு இவர்கள்: நவோதயா பள்ளிகள் தேவை!

வோதயா பள்ளியை இன்றைய அதிமுக அரசு அனுமதிக்கக் கூடாது எனும் தொனியில் எழுதப்பட்ட கட்டுரை (செப்.13) வாசித்தேன். ராஜீவ்காந்தி 1986-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. சட்ட மன்ற உறுப்பினராக இருந்த நான், “இது மிகச்சிறப்பான திட்டமாயிற்றே ஏன் இதனை அமல்படுத்தவில்லை?” என்று அன்றைய கல்வி அமைச்சர் அரங்கநாயகத்திடம் கேட்டேன். “இந்தத் திட்டம் நிறைவேறினால், கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என்பதும், தமிழக இளைஞர்கள், ஐஏஎஸ் உள்ளிட்ட மத்திய பணிகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதும் உண்மைதான். ஆனால், அரசியல் காரணங்களுக்காகக் கருணாநிதி கடுமையாக எதிர்ப்பார். எனவேதான் அதனை நாங்கள் அமல்படுத்தவில்லை” என்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காலம் கனிந்திருக்கிறது. இப்போதேனும் அந்தத் திட்டம் நிறைவேறுவதுதான் சரி.

-பி.எஸ்.ஆர்.வேங்கடரமணா, சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர், தென்காசி.

எதிராளியின் கருத்து

‘க

ருத்துச் சுதந்திரமில்லாக் காலத்தில் காந்தி’ கட்டுரை (செப்.10) வாசித்தேன். கருத்துச் சுதந்திரம் என்பது காந்தியின் முதன்மைக் கொள்கைகளுள் ஒன்று. எந்த வகையான கருத்துக்களும் தாம் சொல்வதுதான் சரி என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது என்றார் காந்தி. ஆனால், அதே சமயத்தில் நான் கொண்ட அகிம்சைக் கொள்கையில் மட்டும் பிடிவாதமாக இருந்தார். ஏனென்றால், அது அறம் சார்ந்தது. யாருக்கும் துன்பம் விளைவிக்காதது. நாம் எதிராளிகள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும், அதில் நியாயம் உள்ளதா, இல்லையா என்பதை உணர வேண்டும். அதுவே உண்மையான ஜனநாயகம் என்றார். இன்று நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள், அந்த ஜனநாயகக்கூறு குறைந்து போனதன் விளைவுதான்!

-எஸ்.பரமசிவம், மதுரை.

அதிமுக குழப்பங்கள்

திமுகவின் பொதுக்குழு கூடி, சசிகலாவைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது குறித்த செய்தியை வாசித்தேன். அதற்கு எதிராகப் பொதுக்குழுவில் கலந்துகொண்ட ஒருவர்கூட குரல் எழுப்பவில்லை. இதேபோல, சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், கூட்டத்தில் ஒரு எதிர்க்குரல் கூட எழவில்லை. ஜெயலலிதா நியமித்தவர்களே பதவியில் தொடர்வார்கள் என்றொரு தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், அப்பதவியில் இருப்பவர்களின் ஆயுள் வரை அவர்களே தொடர பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிசாமியும் விட்டுவிடுவார்களா?

-சாவித்திரி, திருவாரூர்.

ஆட்சியாளர்களின் கடமை

னநல மருத்துவர் இள.சிவபாலன் எழுதிய ‘தற்கொலைகளை ஏன் நம்மால் தடுக்க முடிவதில்லை?’ (செப் 12) கட்டுரை சமூக விழிப்புணர்வுக்கும் அக்கறைக்கும் வித்திடும் சிறப்பான பதிவு. நீட் என்றால் என்னவென்றே தெரியாத மாணவர்களின் குமுறலை அன்றே இந்த சமூகம் கேட்டிருந்தால், அனிதாவின் தற்கொலை தடுக்கப்பட்டிருக்கும். மத்திய, மாநில அரசுத் துறையினர் சமூகத்தின் குறைகளைக் கேட்டு நிரந்தரத் தீர்வு காண இனியாவது முன்வர வேண்டும். நீட் விஷயத்தில்தான் கோட்டை விட்டுவிட்டோம், நவோதயா பள்ளிகள் விஷயத்திலாவது, தமிழக அரசு விழிப்புடன் இருந்து, இந்தித் திணிப்பைத் தடுக்க வேண்டும்.

-கு.மா.பா.திருநாவுக்கரசு, மயிலை, சென்னை.

மக்கள் நலன்தான் முக்கியம்

ருத்துப் பேழை பகுதியில் வெளியான ‘மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் சமூகப் புரட்சியா?’ கட்டுரை, அரசின் தவறான கருத்தாக்கத்தைச் சரியாக விமர்சித்திருந்தது. ஒரு அரசின் கடமை மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது. புதிய இந்தியாவில் உணவு பொருட்களுக்கான ரேசன் கடை மூடப்பட்டுக்கொண்டிருக்கிறது. விவசாயத்தைப் பற்றி அரசு யோசிப்பதே இல்லை. வேலை வாய்ப்பு பணமதிப் பிழப்பினால் குறைந்துகொண்டிருக்கிறது. மேலேயிருந்து உத்தரவுகளைப் பிறப்பிப்பவர்கள், மக்களின் நிலைமையிலிருந்து பார்த்தால்தான் உண்மை நிலைமை புரியும். ஆனால், அதற்கு யாரும் தயாராக இல்லை!

-வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x