Published : 23 Dec 2016 10:24 AM
Last Updated : 23 Dec 2016 10:24 AM

இப்படிக்கு இவர்கள்: காலத்தின் கோலம்!

சசிகலாவைச் சந்தித்த துணை வேந்தர்கள் பற்றிய செய்தி வாசித்தேன். மிகச் சிறந்த துணைவேந்தர் என்றால், என் நினைவுக்கு வருபவர் டாக்டர் ஏ.எல்.முதலியார்தான். மேலவை உறுப்பினர் ஒருவரைக் காண வேண்டி அவைக்கு வெளியே காத்திருந்தேன். கூட்டம் முடிந்ததும் மேலவை எதிர்க்கட்சித் தலைவரான ஏ.எல்.முதலியார் வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கல்வி அமைச்சர் சி.சுப்ரமணியம், ‘உங்களிடம் ஒரு நிமிடம் பேச வேண்டுமே’ என்றார். முதலியார் ‘உங்களுக்காக எனது அறையில் காத்திருப்பேன். நீங்கள் வரலாம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். சி.எஸ்.ஸும் பல்கலைக்கழகம் சென்று அவரைச் சந்தித்துப் பேசியது வரலாறு.

தனது பதவியின் மதிப்பை என்றும் விட்டுக்கொடுக்க மாட்டார். பல்கலைக்கழகத்துக்கு அரசு அளிக்க வேண்டிய மானியத்தைப் பெற, சார்புச் செயலாளர் முன் ஸ்டூலில் உட்கார்ந்து கெஞ்சும் துணை வேந்தர்களையும் பார்த்துள்ளேன். துணை வேந்தர் பட்டாளம், சசிகலாவைப் பார்க்க போயஸ் தோட்டம் சென்றது வியப்பல்ல, காலத்தின் கோலம்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.



வெள்ளை அறிக்கை தேவையில்லையா?

தமிழக முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், அவரது மரணம் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. சிலர் பிரதமருக்கும் புகார் அனுப்பியுள்ளனர், நீதிமன்றத் திலும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதற்குப் பதில் அளிக்கக் கடமைப் பட்ட அதிமுகவின் முக்கியப் புள்ளிகள், வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பதுதான் சந்தேகம் தருகிறது. ஆனால், சம்பந்தமே இல்லாத காங்கி ரஸின் திருநாவுக்கரசரும் மதிமுகவின் வைகோவும் வெள்ளை அறிக்கை தேவை இல்லை என்றும், சந்தேகப்பட ஏதுமில்லை எனவும் முழங்குகின்றனர். இவர்கள் இப்படி சமாதானம் கூறுவதற்கு, அரசியல் நாகரிகம் மட்டும் காரணமாக இருக்காது. வேறு ஏதோ அரசியல் கணக்கு இருக்கக்கூடுமோ என்றே தோன்றுகிறது?

- ஆர்.வடமலைராஜ், சென்னை.



பொருளாதார இழப்பு!

காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் குற்றவழக்கு களில் சிக்கிய வாகனங்களின் நிலையைத் தமிழகம் முழுவதும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது டிச.20ம் தேதிய ‘தி இந்து’ நாளிதழ். வாகனங்களில் 75%-க்கு மேற்பட்டவை மிக மோசமாகச் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் பெருமளவு இழப்பு சாதாரண மக்களுக்குத்தான். வாகனங்களில் செல்லும்போது ஏற்படும் விபத்தில் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்படுவதுடன், வண்டியையும் இழக்க வேண்டியதாகிறது.

பாலிசி இல்லாமலிருந்தாலோ அல்லது புதுப்பிக்கப்படாமலிருந்தாலோ வாகனத்தை இழக்க வேண்டியது தான். எனவே, வாகனம் விற்கப் படும்போதே, அதன் முழு ஆயுள் காலத்துக்குமான காப்பீடு கட்டாய மாக்கப்பட வேண்டும். அப்போதுதான் விபத்தில் சிக்கிய வாகன உரிமை யாளருக்கு இழப்பீடு கிடைக்கும். அத்துடன் காப்பீட்டு நிறுவனம் வண்டியை எடுத்துச்சென்று ஏலம் விட்டுவிடும். இதனால், குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்களில் பெருமளவு சேதத்தைத் தடுப்பதுடன், இடப்பிரச்சினையும் முடிவுக்குக் கொண்டுவர இயலும்.

- எல்.மலர்க்கொடி லோகநாதன், சிகரலப்பள்ளி.



வலுவான சந்தேகம்!

‘ரூபாய் நோட்டு விவகாரத்தில் சந்தேகங்கள்: ராமதாஸ் பட்டியல்’ செய்தியை வாசித்தேன் (டிச.20). ராமதாஸ் எழுப்பியுள்ள சந்தேகம் வலுவானதாக இருக்கிறது. பழைய தாள்கள் புழக்கத்தில் இருந்த புள்ளிவிவரங்களில் மாறுபட்ட தகவல்களைத் தந்திருக்கிறார்கள். சந்தேகத்தைப் பிரதமர்தான் தீர்த்து வைக்க வேண்டும். அப்போதுதான் மக்களுடைய சந்தேகம் தீரும். மோடி, மக்கள் மன்றத்தை மதிப் பவர் என்று கூறிக்கொள்வதால், மக்களுக்கு உண்மையைத் தெரிவிப்பார் என்று நம்புவோமாக!

- அப்துல் கரீம், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x