Published : 14 Oct 2016 10:27 AM
Last Updated : 14 Oct 2016 10:27 AM
திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக உருவானது முதல், இவ்விரு கட்சிகளும் எதிரிக் கட்சிகளாகவே செயல்பட்டுவந்தன. அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, இந்த எதிர்ப்பு மேலும் வலுத்தது. திமுகவில் ஸ்டாலின் தலையெடுத்த பிறகு, இதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவுக்கு அமைதியாக வந்து சென்றார் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமின்றி, அங்கு ஏற்பட்ட ஆரோக்கியமற்ற சூழலையும் அமைதியாகவே கடந்தார்.
இந்நிகழ்வு, ஆரோக்கியமான அரசியலுக்கு ஆரம்பமாக இருந்தது. இதன் நீட்சியாக, முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வாழ்த்துத் தெரிவித்ததுடன் நில்லாமல் மருத்துவமனைக்கே சென்று நலம் விசாரித்து வந்த பிறகும், நாகரிகமாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அத்துமீறி எதையும் பேசவில்லை. ‘இந்த அரசியல் கலாச்சாரம் செழித்து வளரட்டும்’ என்ற தலையங்கத்தின் விருப்பமே எங்களைப் போன்றோரின் அவாவும்!
- பொன்.குமார், சேலம்.
விளையாட்டும் விமர்சனமும்
சரவணன் சந்திரன் எழுதிய ‘வெற்று மைதானத்துக்கு யார் பொறுப்பு?’ கட்டுரை படித்தேன். விளையாட்டு என்றாலே கிரிக்கெட்தான் என்ற மோகம் தொடர்கிறது. கிராமப்புறங் களில் கொடிகட்டிப் பறந்த கபடி, பள்ளி - கல்லூரிகளில் புகழ்பெற்ற வாலிபால் போன்றவை ஆதரவின்றி அருகிவிட்டன. கிராமப்புற விளை யாட்டு வீரர்கள் கவனிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும். எல்லா வற்றுக்கும் மேலாக, இப்படிப்பட்ட சூழலிலிருந்து விளையாடவரும் வீரர்கள் தோல்வியுறும்போது, அடுத்தடுத்த விளையாட்டுகளின்போது எழுச்சிபெறும் வகையிலான வார்த்தைகளோடு அவர்களைப் பற்றி எழுதினால், அது அவர்களுக்குப் புத்துணர்வைத் தரும். மேலும், அது மிகப் பெரிய வெற்றிக்கு வழி வகுக்கும்.
- ப.தாணப்பன், தச்சநல்லூர்.
கையெடுத்துக் கும்பிடுவோம்
பெண்ணைப் பெற்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து, நாட்டையே கலங்கடித்துக்கொண் டிருக்கும் ஒருதலைக் காதல் கொலைகளுக்கு, நடைமுறைப்படுத் தக்கூடிய நல்லதொரு வழியைக் காட்டியிருக்கிறார் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் முதலடி எடுத்து வைத்தால்தான் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற அடிப்படை உண்மையை அவர் சொல்லியிருந்த விதம் அசரவைக்கிறது. “பெண்கள் தொடாதே என்றால் அவர்களைத் தொடாதீர்கள். ‘நோ’ சொன்னால் கொன்றுவிடாதீர்கள்” என்று மகன் களிடம் சொன்ன மேரி கோமைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.
- ஜே.லூர்து, மதுரை.
நதி எங்கே போகிறது?
நதிகளை இணைப்பதால் ஏற்படும் சூழலியல் விளைவுகள்பற்றி மிகிர் ஷாவின் பேட்டி, சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது. இதன் மூலம் நல்ல நோக்கத்தில் நதி நீர் இணைப்பைப் பலர் வேண்டினாலும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்ற புரிதலைத் தமிழகத்துக்குக் கொண்டுசென்ற ‘தி இந்து’வுக்கு நன்றி. வெகுகாலம் முன்பே இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், கேரள ஆறுகள் அரபிக் கடலில் கலப்பதால் உப்பின் அடர்த்தி குறைவாக இருப்பதையும் கடல் வளமிக்கதாக உள்ளதையும், மேற்கு (அரேபியா) நோக்கிச் செல்ல செல்ல உப்பின் அடர்வு அதிகமாக இருப்பதைப் பற்றியும் சுட்டிக்காட்டியது நினைவுக்கு வருகிறது.
- கதிரேசன், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT