Published : 31 May 2016 11:15 AM
Last Updated : 31 May 2016 11:15 AM

எதிர்க்கட்சித் தலைவர்

1952-ம் ஆண்டு சட்டப்பேரவை தொடர்ந்து பல எதிர்க்கட்சிகளைச் சந்தித்துள்ளது. சிலரே எதிர்க்கட்சித் தலைவருக்குப் பொருத்தமாகவும் இருந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குப் பெருமையும் சேர்த்துள்ளனர். எதிர்க்கட்சி என்பது எதிரிக்கட்சியாக இருக்கக் கூடாது. ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் தமிழக மக்களை முன்னேற்ற உறுதுணையாகவும் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில், தவறுகளைச் சுட்டிக் காட்டவும் வேண்டும். ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைவிட, யாரைப் போல நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டுரையாளர் அறிவுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கும் மு.க.ஸ்டாலின் ஒரு முன்மாதிரியாக நடந்துகொள்வார் என்று நம்புவோம்.

- பொன்.குமார், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x