Published : 09 May 2016 10:39 AM
Last Updated : 09 May 2016 10:39 AM

சொல் வேறு; செயல் வேறு!

பேட்டியில், ஊழல் தொடர்பான கேள்வியை மிகச் சாமர்த்தியமாகக் கடந்திருக்கிறார் அன்புமணி. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவும் இந்திய மருத்துவ ஆணையமும் நிராகரித்த ஒரு மருத்துவக் கல்லூரிக்கு இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு அனுமதி வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவை. அன்புமணி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது இந்திய மருத்துவ ஆணையத்தின் தலைவராக இருந்த கேதன் தேசாய் எப்படிப் பிடிபட்டார், தெரியுமா? ரூ. 1500 கோடி, 1000 கிலோவுக்கு மேல் தங்கத்தின் கதை அது. சிபிஐ விசாரணை அன்புமணியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

அன்புமணி அமைச்சராக இருந்த காலத்தில்தான் கிண்டியில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனமும், வெறிநாய்க் கடிக்குச் சிறந்த மருந்து உற்பத்தி செய்யும் குன்னூர் பாஸ்டர் இன்ஸ்ட்டியுட்டும், இமாச்சலப் பிரதேசம் காசாலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி மையமும் இவர் ஆணையிட்டு மூடப்பட்டன. இந்த உயிர்காக்கும் மருந்து தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டதன் பின்னணியில் பேசப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கான ஆதரவான லாபி குற்றச்சாட்டுகளை அத்தனை எளிதாக மறந்துவிட முடியாது. மத்திய அரசு ஊழியர்கள் கடுமையான போராட்டத்துக்குப் பின்பு அன்புமணியின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தினர். இப்படி அன்றைக்குப் பொது நிறுவனங்களை மூட முற்பட்டவர்தான் இன்றைக்குத் தமிழகத்தின் பொது சுகாதாரத் துறையில் மாற்றம் கொண்டுவரப்போவதாகக் கூறுகிறார். சொல் வேறு; செயல் வேறு; இதுதான் பாமக, அன்புமணியின் அரசியல்!

- க. உதயகுமார், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x