Published : 13 May 2016 11:28 AM
Last Updated : 13 May 2016 11:28 AM
கேரள முன்னாள் முதல்வர் மறைந்த ஈ.கே.நாயனார் குறித்து பி.ஏ.கிருஷ்ணன் தன்னுடைய கட்டுரையில் சொல்லியிருப்பது அனைத்தும் உண்மையே. நான் கடந்த 1997 முதல் 2002 வரையான கால கட்டத்தில் சவுதி அரேபியா ரியாத் நகரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, என்னுடைய பக்கத்து அறைவாழ் மலையாள நண்பர்களின் அறைக்குச் சென்று, அவர்களுடன் மலையாள சினிமா பார்ப்பது வழக்கம்.
அப்போது சில வேளைகளில் டி.வி.யில் ஈ.கே.நாயனாரின் கேள்வி - பதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும். எல்லா மலையாளிகளும் அதை ஆர்வமுடன் கவனிப்பதைப் பார்த்திருக்கிறேன். மிகவும் நகைச்சுவையாகப் பேசுவார். இயல்பாகப் பதிலளிப்பார். சில நேரங்களில் அவரது பதில்களால் பெரும் சிரிப்பு வெடி எழுந்து அறையே அதிரும். அந்த மக்கள் தலைவரை நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி.
- கே.எஸ்.முகம்மத் ஷூஐப், காயல்பட்டினம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT