Published : 10 May 2016 11:07 AM
Last Updated : 10 May 2016 11:07 AM

கவனம் செலுத்த வேண்டும்

ஆளும் கட்சியான அதிமுக, நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற நினைப்பதை ‘ஏமாற்று வேலைகளை நிறுத்திக்கொள்ளுங்கள்!’ தலையங்கம் எடுத்துக்காட்டியுள்ளது. செல்பேசி, இருசக்கர வாகனங்கள் போன்ற நுகர் பொருட்களைத் தன் சக்தி மற்றும் தேவைக்கேற்பத் தனிமனிதனால் வாங்க முடியும்.

ஆனால், தனிமனிதனால் செய்ய முடியாத, ஒரு அரசால் மட்டுமே செய்யக்கூடிய, மக்களுக்குத் தேவையான பல காரியங்கள் இருக்கின்றன. தடையில்லா மின்சாரம், சுத்தமான குடிநீர், அனைவருக்கும் இலவசக் கல்வி, தரமான மருத்துவம் போன்ற நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

- அ.ஜெயினுலாப்தீன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x