Published : 23 May 2016 11:40 AM
Last Updated : 23 May 2016 11:40 AM
21.05.2016-ம் தேதி நாளிதழில் வெளியான ‘கசங்கிய கதம்ப மாலை’ அருமை. ஆனால், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் உண்மையில் தமிழ்நாட்டை மீட்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது” எனக் கூறியிருப்பது தவறானது என்பது என் எண்ணம். 1967 வரை “தமிழ், தமிழர், தமிழ்மொழி எனச் சொல்வதே பிற்போக்குத் தனம்’’ என்று பேசி வந்த கம்யூனிஸ்ட்டுகள், திமுக ஆட்சிக்கு வந்ததும் அதே பாணியில் “தமிழ், தமிழர், தமிழ்நாடு” பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.
1971-ல் எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகியபோது ‘புரட்சி நடிகராக’ இருந்தவரை ‘புரட்சித் தலைவராக’ சித்தரித்த அரசியல் பிழையைச் செய்தவர்கள் இந்த கம்யூனிஸ்ட்டுகள்தான். அடுத்து, ஜெயலலிதாவை ஆதரித்ததன் மூலம் அந்த அவலம் தொடர்ந்தது. தற்போது விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியதன் மூலம், கம்யூனிஸ்ட் டுகள் கீழான நிலைக்குப் போய்விட்டார் கள். தமிழகத்தில் இவர்கள் ஆளுங்கட்சியாக வர முடியாததற்குக் காரணம், தேர்தல் நேரத்தில் தவறான முடிவெடுப்பதே ஆகும்.
- பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு), மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT