Published : 17 May 2016 12:33 PM
Last Updated : 17 May 2016 12:33 PM

கணிப்பும் திணிப்பும்

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுயேச்சை வேட்பாளர்களுக்குக்கூட முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற ஆசை இந்தத் தேர்தலில் வளர்ந்திருப்பதை “6 இல்ல...24 முனைப்போட்டி!” கட்டுரை சுட்டிக்காட்டியது. தனக்குப் பின்னால் 4 பேர் வந்துவிட்டால், எந்த விதக் கொள்கையும் இல்லாமல், எப்படியாவது பணம் சம்பாதிக்க முடியாதா என்ற ஒரே எண்ணத்தில் தெருவுக்கு ஒரு கட்சி ஆரம்பிக்கும் அவல நிலை மாற வேண்டும்.

- அ.ஜெயினுலாப்தீன், சென்னை.

கணிப்பும் திணிப்பும்

‘யானையைத் தடவிப் பார்த்து, குறிசொன்ன கதை’யாகத்தான் இன்றைய கருத்துக் கணிப்புகள் இருக்கின்றன. மக்களின் மனநிலையை முன்கூட்டியே அறியும் விதமாக ‘கருத்துக் கணிப்புகள்’வந்த காலம் மலையேறிப் போய், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளையும், அபிப்பிராயங்களையும் மனதில் வைத்துச் செயல்படுவதற்கான வாய்ப்பாகத் தேர்தலைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களின் தாக்கத்திலிருந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தாங்கள் வெளியிடும் கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவுகளோடு எந்த விதத்திலும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லாமல் இருக்குமானால், அந்நிறுவனத்தை பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்? ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டதற்காக, மக்கள் நம் நிறுவனத்தை மதிக்க மாட்டார்களே என்ற கூச்சமோ, குற்ற உணர்வோ, பயமோ இல்லாமல் கருத்துக் கணிப்புகள் வெளியிடுகிறவர்களை என்ன சொல்வது?

- அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x