Published : 10 May 2016 11:05 AM
Last Updated : 10 May 2016 11:05 AM
ஜனநாயகத் திருவிழா பகுதியில் வெளியான, ‘தண்ணீர் விட்டா வளர்த்தார்கள்’ கட்டுரையையும், ‘கூட்டணி ஆட்சி நலம் பயக்குமா?’ என்ற கட்டுரையையும் படித்தபோது, இரண்டு கட்டுரைகளுக்குமான ஒரு ஒப்பீட்டினை எண்ணிப் பார்க்கத் தோன்றியது. காந்தியடிகள் செய்த மகத்தான சாதனைகளில் ஒன்றான, காங்கிரஸ் கட்சியில் தன்னை முன்னிறுத்தாமல் மாநிலங்களில் அவரவர் மொழி வழியே கட்சியைக் கட்டியமைத்ததோடு, ஒவ்வொருவருடைய ஆளுமைகளோடும் அவரவர் விருப்பங்களோடும் கைகோத்துப் பணிபுரிய வழிவகுத்தார் என்பதைப் படித்தபோது, சுதந்திரப் போராட்ட காலத்திலேயே மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட்டது சாத்தியமானது தெளிவாகப் புரிகிறது.
அதைப் போன்றே தற்போது மாநிலத்தின் கூட்டணி ஆட்சியிலும் அப்படி நமது அரசியல்வாதிகளால் ஏன் இருக்க முடியவில்லை? ஒற்றைத் தலைமை என்பது பிரச்சினைகளுக்குத்தான் வழிவகுக்குமே தவிர, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாது என்பதைப் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து அரசியல்வாதிகள் செயல்பட்டால் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் சாத்தியமே.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT