Published : 24 May 2016 10:18 AM
Last Updated : 24 May 2016 10:18 AM
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே திமுக வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதிலேயே வைகோ குறியாகவும், உறுதியாகவும் இருந்தார். தேதிமுக தலைவர் விஜயகாந்துக்கு திமுக உடனான கூட்டணிக்கு ஆசை இருந்தும், தன்னைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு விஜயகாந்துக்கு முதல்வர் ஆசையைக் காட்டி கூட்டணிக்குச் சாமர்த்தியமாக அழைத்துக்கொண்டார். தொடக்கத்தில் கூட்டணி ஒரு சலசலப்பை ஏற்படுத்தினாலும், தேர்தல் நெருங்க நெருங்க பேசப்படாமலே போய்விட்டது.
வெற்றி பெறாது என்று தெரிந்ததால்தான் போட்டியிடாமல் தந்திரமாக விலகிக்கொண்டார். திமுகவைத் தோற்கடித்த பெருமையையும் தேதிமுகவையும் மக்கள் நலக் கூட்டணியை அழித்த பெருமையையும் தேடிக்கொண்டார். அதிமுகவின் நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டார். நன்றிக்குரியவராகவும் உள்ளார் . கட்டுரையாளர் குறிப்பிட்டதுபோல வைகோ ஒரு குயின்மேக்கர் என்பதை நிரூபித்துவிட்டார்.
- பொன்.குமார், சேலம்.
ஜெயலலிதாவின் வெற்றி
பெண்களின் ஓட்டுகள் நான்கு லட்சம் அதிகம் எனும்போதே ஜெயலலிதாவின் வெற்றி உறுதியான விஷயம்! இந்த ஓட்டுகள் அனைத்துமே பெண்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. புதிய அரசு, சொன்னபடியே மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தி, தமிழ்நாட்டை நல்லுதாரண மாநிலமாக மாற்ற முதல் கையெழுத்து போட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
- இரா. பொன்னரசி, வேலூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT