Published : 24 May 2016 10:19 AM
Last Updated : 24 May 2016 10:19 AM
வெற்றிக்குப் பணமும் காரணம், பணம் மட்டுமே காரணம் அல்ல என்பதை அழகாக அலசியிருந்தது கருத்துப் பேழையில் வெளியான ‘வெற்றிக்குப் பணம்தான் காரணமா?’ கட்டுரை. முள்செடியை வளரவிட்டால், அது வளர்ந்து பாதையையே மறைத்துவிடுவதுபோல, கொடுத்துப் பழக்கிய பணமே இன்று பலரையும் பதம் பார்த்திருக்கிறது. முன்னாள் சபாநாயகரின் மகன் தியாகராஜன் பணம் தர மாட்டேன் என பகிரங்கமாகச் சொல்லி வெற்றிபெற்றிருப்பதைப் போல தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் பணம் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு குறைவதோடு, மக்களின் நம்பிக்கையைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் போட்டியிடுவோருக்கு ஏற்படும். மாற்றை விரும்பிய புதிய வாக்காளர்கள் நோட்டாவை அதிகம் தேர்ந்தெடுத்ததைப் புள்ளிவிவரங்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. இவர்களின் வாக்கைப் பெற வேண்டுமானால், கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோல் கீழிருந்து தங்களின் செயல்பாடுகளைத் தொடங்கினால் மட்டுமே முடியும். பணத்தால் மனத்தை மாற்றிவிடலாம் என எண்ணுவது பகல் கனவாகத்தான் முடியும்.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT