Published : 18 May 2016 11:42 AM
Last Updated : 18 May 2016 11:42 AM

தோல்வியடைந்தது ஆணையம்

தேர்தலில் பணநாயகம் குறித்து ‘தி இந்து’வில் வெளியான கட்டுரைகள் நடுநிலை தவறாமல், தனிப்பட்ட எவரையும் தாக்காமல், விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்திருந்தது. பணநாயகம் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் தழைத்திட வேண்டும் என்பதை விளக்கியுள்ளது பாராட்டுக்குரியது.

சென்ற சட்டப் பேரவை தேர்தலில் மதுரையில் மூன்று மூத்த அதிகாரிகள் எப்படி நேர்மையாக வேலை செய்து ஆளும் கட்சித் தலைமையைப் புலம்ப வைத்தனர் என்பதும், அதன் காரண மாக மதுரை மாவட்டத்தில் ஓர் இடத்தில் கூட ஆளும் கட்சி வெற்றி பெற முடியவில்லை அத்தகைய அதிகா ரங்களைப் பெற்றுள்ள ஆணையம் இந்தத் தேர்தலில் பண வினியோகத்தைத் தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது என்பதே வருத்தமான உண்மை.

- மு.செல்வராஜ், மதுரை



ஒரு ஓட்டின் முக்கியத்துவம்!

தேர்தல் என்பது ஒரு ஓட்டப் பந்தயம் போல. ஒரு நொடி முன்னேறியவர்களே வெற்றி பெறுவார்கள். அது போலத்தான் தேர்தலில் ஒரு ஓட்டிலும் வெற்றி பெறலாம். ஒரு லட்சம் ஓட்டிலும் வெற்றி பெறலாம். எனவே ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். ஒரு ஓட்டுதானே எனப் போடாமல் இருக்கக் கூடாது. ஒரு ஓட்டுதானே என அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.

_பொன். குமார், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x