Published : 30 May 2016 12:32 PM
Last Updated : 30 May 2016 12:32 PM
கடுங்கோடை காரணமாகப் பள்ளிகள் திறப்பதைத் தள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது. வெகுகாலமாக மேற்குப் பகுதிப் பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறந்து, சித்திரை முதல் நாளுக்கு முன் பள்ளி ஆண்டை முடிக்கும். சென்னையில் ஜூன் இரண்டு அல்லது மூன்றம் வாரத்தில் தொடங்கி ஏப்ரல் கடைசி வரை பள்ளிகள் இயங்கும். கல்வி விதிகளின்படி ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் பட்டியலைத் தயாரித்துக் கல்வி அலுவலருக்குத் தகவலுக்காக, ஒப்புதலுக்கல்ல.. அனுப்ப வேண்டும். அரசு விடுமுறை நாட்கள் கண்டிப்பாகப் பள்ளி விடுமுறை நாட்களாக இருக்க வேண்டும் என்பதும், குறைந்தபட்ச நாட்கள் பள்ளி இயங்க வேண்டும் என்பவை மட்டும் நிபந்தனைகள்.
தங்கள் வட்டாரச் சூழலுக்கேற்ற வண்ணம் விடுமுறைப் பட்டியல் அமையும். மாவட்டக் கல்வி அதிகாரி, விடுமுறைப் பட்டியல்களைப் பொறுத்து ஆண்டு ஆய்வுத் திட்டத்தைத் தயார் செய்து, ஜூன் இறுதிக்குள் பள்ளிகளுக்கு அனுப்புவார். இன்று பள்ளிகளுக்கு மாறாக, பள்ளிக் கல்வித் துறையே மாநிலம் முழுமைக்கும் பொதுவான விடுமுறைப் பட்டியல் தயாரித்துப் பள்ளிகளுக்கு அனுப்புகிறது. ஆண்டாய்வுத் திட்டம் மறக்கப்பட்ட மற்றும் துறக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. கல்வித் துறையின் தலையாய பணி, வகுப்பறைக் கற்பித்தல்-கற்றல் பணிகளை ஆய்வு செய்து தரத்தைப் பேணுதலாகும்.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT