Published : 28 May 2016 09:47 AM
Last Updated : 28 May 2016 09:47 AM
குமரியில் மத அரசியல் என்ற அற்புதமான கட்டுரையை வெளியிட்டுள்ளீர்கள். சாதி, மத எதிர்ப்புக்கு ஆதரவான திராவிட இயக்கங்களே ஒவ்வொரு கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் தங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தது அனைவரும் அறிந்ததே. இது இன்று நேற்றல்ல, தொன்றுதொட்டே இருந்துவருகிறது. 1969-ல் காமராஜர் நாகர்கோவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, அங்கு பேசிய கருணாநிதி, ‘‘காமராஜர் ஒரு இந்து. இங்கு பெரும்பான்மையினராக உள்ள கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவரை எதிர்த்துப் போட்டியிடும் கிறிஸ்தவரான மதியாஸுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்’’ எனப் பிரச்சாரம் செய்தார். அங்குள்ள ஒவ்வொரு தேவாலயத்துக்கும் சென்று பாதிரியார்களைச் சந்தித்து வாக்கு கேட்டார்.
ஆகவே, இவர்கள் சாதியில்லை, மதமில்லை என்று சொல்வதெல்லாம் ஓட்டுக்கான விளையாட்டே தவிர, மக்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. இதேநிலை நீடித்தால், எதிர்காலத்தில் தமிழகத்தில் சாதி, மதரீதியான வன்முறைகளுக்கு மூல காரணமாக திராவிட இயக்கங்களே நிற்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த நிலை மாற வேண்டும். மக்களிடம் தங்களின் திட்டங்களையும், சாதனைகளையும் எடுத்துக்கூறி வாக்கு கேட்க வேண்டுமே தவிர சாதி, மதங்களை முன்னிறுத்தி அல்ல.
- மகேந்திரன், சென்னை - உங்கள் குரல் வழியாக...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT