Published : 03 May 2016 10:35 AM
Last Updated : 03 May 2016 10:35 AM
மருத்துவப் படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் பொதுநுழைவுத் தேர்வு நடத்த வேண்டுமென்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் ஊழலை ஒழிக்க பொது நுழைவுத் தேர்வு என்று சொல்லப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், தனியார் கல்லூரிகள் புற்றீசல் போலக் கிளம்ப வித்திட்டதே ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புதான். எவ்வித நிபந்தனையையுமின்றி இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் தாம் விரும்பிய வண்ணம் ஒரு கல்வி நிறுவனம் தொடங்கி நடத்த அடிப்படை உரிமை உண்டு என்று அத்தீர்ப்பு கூறியதன் விளைவே இன்று உயர் கல்வியில் நடைபெறும் ஊழல்களுக்கு அடிப்படைக் காரணம்.
30-க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்களும், ஏறக்குறைய 25 பயிற்றுமொழிகளைக் கொண்ட நம் நாட்டில், பொது நுழைவுத் தேர்வு என்பது பெரும்பான்மையோரின் அடிப்படை உரிமைகளை மறுதலிப்பதேயாகும். இந்தியா ஒரு பன்முக நாடு. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனைப் போற்றிப் பாதுகாப்பதில் முன்னுரிமை பெற வேண்டும். இந்திய சமூகத்தில் உள்ள பாகுபாடுகளைக் கருத்தில் கொள்ளாதும், பொது நுழைவுத் தேர்வு என்பது பெரும்பான்மையான திறன்மிக்க மாணவர்களை விலக்கவே செய்யும் என்று அறியாதும் அளித்த தீர்ப்பு. அவர்கள் குரல் கேட்கப்படாதது ஒரு பெருங்குறை.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT