Published : 03 May 2016 10:34 AM
Last Updated : 03 May 2016 10:34 AM

மாணவர் மலர் வேண்டும்!

மாணவர்களின் ஆற்றல் உணர்ந்து ஜனநாயகத்தை நோக்கி அவர் களை ஆற்றுப்படுத்தும் நோக்குடன் ‘வாக்காளர் வாய்ஸ்’ எனும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்சிகளைத் தமிழகம் முழுக்க நடத்திய ‘தி இந்து’ நாளிதழுக்கு ஒரு ஆசிரியராய் நன்றி தெரிவிக்கிறேன். இளம் எழுத்தாளர் களுக்கு எழுத்துக் களம் அமைத்து அவர்களைத் தரமான இலக்கியத்தை நோக்கித் திருப்பும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.

எல்லா வயதினருக்கும் தினமும் மலரை வெளியிடும் ‘தி இந்து’ வரும் ஜூன் மாதம் முதல் மாணவர் மலர் கொண்டுவர வேண்டும். அதில், சாதனை படைக்கும் கல்லூரி மாணவர்கள் குறித்த கட்டுரைகள், மாணவர்கள் எழுதும் சமூகச் சீர்திருத்தக் கவிதைகள், அழகான குட்டிக் கதைகள், அவர்களுக்கு ஆற்றுப்படுத்தும் அற்புதமான இலக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை அழகாகத் தரவேண்டும்.

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x