Published : 26 May 2016 11:25 AM
Last Updated : 26 May 2016 11:25 AM

நாகரிக அரசியல்

முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்ததும், எதிர்க் கட்சி சார்பில் ஸ்டாலினும், திமுக எம்.எல்.ஏக்களும் விழாவிற்கு வந்ததும் அனைவரது புருவங்களையும் உயரவைத்தது. ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார வைக்கப்பட்டார் என்ற கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் கொடுத்த விளக்கம் அடுத்த ஆச்சரியம்.

புதிய ஆட்சி அமைந்தவுடனேயே இதுபோன்ற சுமுகமான ஆளும் கட்சி, எதிர்க் கட்சி உறவு மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. இதே போன்ற சுமுக இணக்கத்தை இவர்கள் எப்பொழுதும் பின்பற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.



வரவேற்கலாம்

இரண்டாவது முறையாக தரப்பட்ட முதலமைச்சர் பதவியும், வரலாற்றிலேயே முதல் முறையாக அசுர பலத்துடன் கிடைக்கப்பெற்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியும் இரண்டு கட்சித் தலைமையிடமும் ஒரு பதற்றத்தையும், நேர்மறையான செயல்பாடுகளுக்கான கட்டாயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மகிழ்ச்சியைத் தந்ததற்காகவே இந்தத் தேர்தல் முடிவை வரவேற்கலாம்.

ரா.பிரசன்னா, மதுரை.



முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்ததும், எதிர்க் கட்சி சார்பில் ஸ்டாலினும், திமுக எம்.எல்.ஏக்களும் விழாவிற்கு வந்ததும் அனைவரது புருவங்களையும் உயரவைத்தது. ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார வைக்கப்பட்டார் என்ற கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் கொடுத்த விளக்கம் அடுத்த ஆச்சரியம். புதிய ஆட்சி அமைந்தவுடனேயே இதுபோன்ற சுமுகமான ஆளும் கட்சி, எதிர்க் கட்சி உறவு மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. இதே போன்ற சுமுக இணக்கத்தை இவர்கள் எப்பொழுதும் பின்பற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

எம்.விக்னேஷ், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x