Published : 23 May 2016 11:41 AM
Last Updated : 23 May 2016 11:41 AM

நம்பகத்தன்மையும் வேண்டும்!

‘மாற்று அரசியலின் தோல்வியல்ல’ கட்டுரையில் பல காரணங்களை அலசினாலும், சொல்ல மறந்த முக்கியக் காரணம், மக்கள் மனதில் விதைக்கப்படும் ‘நம்பகத்தன்மை’. இது தேர்தல் அரசியலில் மிகவும் முக்கியம். மாற்று அரசியலை முன்னெடுத்த கட்சித் தலைவர்களின் பின்புலங்கள், பரப்புரைகள், அவர்களைப் பற்றி சமூகவெளிகளில் உலவிய தகவல்கள் மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கத் தவறிவிட்டன.

மாற்று அணியினர் தங்கள் மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்தாமல், மற்றவர்களை விமர்சிப்பதிலேயே நேரத்தை வீணடித்துவிட்டார்கள். முந்தைய இரு தேர்தல்களின் வாக்கு விகிதத்தையும், இத்தேர்தலின் வாக்கு விகிதத்தையும் ஒப்புநோக்கும்போது, அதிமுக தனது நம்பகத்தன்மையைச் சிறிதளவு இழந்திருக்கிறது, திமுக மீட்டெடுத்திருக்கிறது.

- விளதை சிவா, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x