Published : 06 May 2016 12:29 PM
Last Updated : 06 May 2016 12:29 PM
இந்தத் தேர்தலில் அதிகம் பேசப்படாத முக்கியமான பிரச்சினைகள் நிலபரிவர்த்தனைப் பொருளாதாரமும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமும்.
பத்திரப் பதிவுக்கான கட்டணம் 6%லிருந்து இரண்டு மடங்கானது. இது நிலபரிவர்த்தனை வணிகத்தை அசையாமல் நிறுத்திவிட்டது. நில புரோக்கர்களின் அத்துமீறலுக்கு இது சிறு நிவாரணத்தைத் தந்தாலும் அவசரத் தேவைக்கு நிலத்தைக் கைமாற்ற முடியாமல் சாமானியர்கள் தவிக்கின்றனர்.
அடுத்தது, பங்களிப்பு ஓய்வூதியச் சட்டம். இந்தத் திட்டம் புதிய பணியாளரின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அரசு ஊதியம் பெறுவோரின் ஒரே எதிர்கால நம்பிக்கை இந்த ஓய்வூதியம்தான். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்பது அரசுத் துறையைத் தனியார் துறையாக மாற்றும் மோசடி. தேர்தல் களத்தில் நிற்கிற முதன்மைக் கட்சிகள் இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- வறீதையா கான்ஸ்தந்தின், மின்னஞ்சல் வழியாக...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT