Published : 02 May 2016 12:10 PM
Last Updated : 02 May 2016 12:10 PM
சுகாஸ் போக்கரின் ‘சாதியை ஒழிப்பது எப்படி?’ என்ற கட்டுரையை எளிய தமிழில் ஆசைத்தம்பி அருமையாகச் சுருக்கித் தந்துள்ளார். இன வேற்றுமைக்கு எதிரான டர்பன் உச்சி மாநாட்டில் ஐநாவின் சிறப்பு ஆணையர் மேரி ராபின்சன், ‘சாதி, மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றச் செயல்’ என்று ஆதாரங்களுடன் நிறுவினார்.
சாதியை எந்த வகையில் கடைப்பிடித்தாலும் சட்டப்படி குற்றமே என்னும் அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் வராவிடில், சாதியை ஒழிக்க முடியாது. மதம், தொழில், சொத்துரிமை, அதிகாரம், ஆளுகை போன்றவற்றுடன் பின்னிப்பிணைந்துள்ளது அந்தச் சாதி. போர்கர் சொன்னதுபோல அறம் - அறிவு ஆகிய ஆயுதக் கோடரிகள் சாதிய நச்சு மரத்தை வெட்டி அழிக்கப் போதாது!
-அ.அந்தோனி குருசு, திருச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT