Published : 09 May 2016 10:40 AM
Last Updated : 09 May 2016 10:40 AM
பொருளாதார மாணவர்களை மட்டுமல்ல, பொருளாதார நிபுணர்களையும் சிந்திக்க வைத்தது ‘வரி விதிப்புக்கான இன்னொரு முகம்’தலையங்கம். யாவருக்கும் விளங்காமலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் பொருள் கொள்ளும் விதமாகவும் இருக்கிற நமது வருமானச் சட்டமே வரி ஏய்ப்புக்குக் காரணம். டி.டி.எஸ் எனப்படும் வரிபிடித்தம் செய்யப்படும் முறையில் உள்ள குறைபாடுகளே வரி ஏய்ப்புக்கு முக்கியக் காரணங்கள்.
வங்கியில் டெபாசிட் செய்தால் வரும் வட்டி ரூபாய் பத்தாயிரத்துக்கு மேற்பட்டால் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதைத் தவிர்க்க, ஓய்வு பெற்றோர் 15பி படிவத்தைக் கொடுக்கலாம். ஆனால், இந்தப் படிவங்களை யார் கொடுக்க வேண்டும் என்ற விவரம் கொடுப்பவருக்கும் தெரிவதில்லை வாங்குபவருக்கும் தெரிவதில்லை. இது போன்ற குழப்பமான சட்டத்தால் தான் வரி ஏய்ப்பு அதிகரிக்கிறது. வருமான வரிச் சட்டம் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக்கப்படுமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
- ஜே. ராஜகோபாலன், நெய்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT