Published : 18 Apr 2016 12:09 PM
Last Updated : 18 Apr 2016 12:09 PM

நூலகம் மீது ஏனிந்த வெறுப்பு?

பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவ சமுதாயத்தின் கல்வி மற்றும் பொதுநலனுக்காக முந்தைய திமுக அரசால் திட்டமிட்டு வடிவமைத்து பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ‘அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக’த்தைப் பராமரிப்பதில் இன்றைய அதிமுக அரசு இவ்வளவு அகங்காரமாய் பாரபட்சம் காட்டுவது சிறுபிள்ளைத் தனமாகவேபடுகிறது. ஏற்கெனவே இந்நூலகத்தை இடம்மாற்ற நினைத்து, அது நீதிமன்ற உத்தரவால் தடுக்கப்பட்டது.

போதிய பராமரிப்பின்றி தூசு படிந்த புத்தகங்கள், இருக்கைகள், பயன்படுத்த முடியாத கழிப்பறைகள், நிர்வகிக்கப் போதிய பணியாளர்கள் அற்ற சூழல் யாவும் பயனாளிகளுக்கு அல்லவா மிகுந்த சங்கடத்தையும், அருவருப்பையும் தரும். இந்தக் குறைபாடுகளை நீக்குவதற்கு உயர் நீதிமன்றமே அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்ததுடன், குறைகள் தீர்க்கப்படாவிட்டால் நீதிமன்றமே முன்னின்று இப்பணிகளை மேற்கொள்ளும் என்பது அரசுக்கு அளித்த எச்சரிக்கையாகும். இந்த அளவுக்குக் காழ்ப்புணர்வுடன் ஓர் அரசு நடந்துகொள்வது மக்களாட்சிக்கு ஏற்புடையதல்ல.

- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x