Published : 15 Apr 2016 02:11 PM
Last Updated : 15 Apr 2016 02:11 PM

நுழைவுத் தேர்வு எதற்கு?

அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்குப் பொது நுழைவுத் தேர்வு நடத்திட உச்சநீதி மன்றம் அனுமதியளித்திருப்பது அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள சமத்துவம் சமநீதிக் கோட்பாடுகளுக்கு முரண்பட்டது. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து ஆறு ஆண்டுகளாயினும் அனைவருக்கும் தரமான தொடக்கக் கல்வியே எட்டாக்கனியாக உள்ளது. நுழைவுத் தேர்வுகளில் கலந்துகொள்ளும் தகுதியுடையோரிடம் மிகுந்த வேறுபாடுகள் இருக்கும்.

மேலும் வசதி மிக்கவர் பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து நுழைவுத் தேர்வினை எதிர்கொள்வார்கள். கோடா என்ற ஊரில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் இருப்பதாகவும், ஒவ்வொரு மாணவரும் நாளொன்றிற்கு 17 மணி நேரம் வரை பயிற்சி பெறுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இவர்களோடு ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த அறிவுசான்ற மாணவர் எவ்வாறு போட்டியிட முடியும்? இன்று நமக்குத் தேவை கிராமப்புறங்களில் மனிதாபிமானத்தோடு செயல்படக்கூடிய மருத்துவர்கள். நுழைவுத் தேர்வு அத்தகையவரை அடையாளம் காண உதவாது.

ச.சீ. இராஜகோபாலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x