Published : 13 Apr 2016 10:56 AM
Last Updated : 13 Apr 2016 10:56 AM

ஒரு முகம் போதுமா?

ஆர்.எல்.ஸ்டீவென்சன் படைத்த டாக்டர் ஜெகிலும் ஹைடும் என்ற நாவலில் ஒரே மனிதனின் இரு முகங்கள் விவரிக்கப்பட்டிருக்கும். இரண்டல்ல, பல முகங்கள் கொண்டவனாக மனிதன் திகழ்கிறான். இரங்கல் செய்தி விடுக்கும்போது ஒருவருடைய அறப் பண்புகளை மட்டும் சுட்டுவது நாகரிகம். வாழ்க்கை வரலாற்றில் ஒருவரது பன்முகங்களையும் எடுத்துக் கூற வேண்டும். படிப்பவர் தாமாக அவரை மதிப்பிட்டுக்கொள்வர்.

‘எம்.ஜி.ஆர்.100’ அவரது ஒரு முகத்தை மட்டும் காட்டுகின்ற முறையில் எழுதப்படுவது அவரை முழுமையாக மதிப்பிட உதவாது. அவருடைய திரையுலக வாழ்க்கை பற்றியும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. என்னைப் பொறுத்தவரையில் நர்சரிக் கல்வி முதல் மருத்துவக் கல்வி வரை வணிகமயமாக்கி சாதாரண மக்களுக்கு அவை எட்டாக் கனியாக்கியதுடன் பொதுக் கல்வி நிறுவனங்களைச் சீர்குலைத்ததும் மன்னிக்க முடியாத மக்கள் விரோதச் செயல்கள். பள்ளிகளின் முதற்பணி தரமான கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதேயாகும். அரைக் கோடி கொடுத்து மருத்துவம் பயிலும் மாணவர், மக்கள் சார்பாக இயங்க முடியுமா? வணிகமயக் கல்வி எளியவரது வாழ்க்கையில் ஒளிவீசாது இருட்டடித்துவிட்டது.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x