Published : 06 Apr 2016 10:21 AM
Last Updated : 06 Apr 2016 10:21 AM
கருத்துப் பேழை பகுதியில் வெளியான ‘ஆட்டிஸம் என்னும் பளிங்கு அறை’ கட்டுரை அருமை. ஆட்டிஸம் ஒரு நிலைப்பாடு, நோய் இல்லை. பெற்றோர்கள் 60 % சம்பாத்தியத்தை ஆட்டிஸம் குழந்தைகளுக்காகச் செலவிடுகிறார்கள் என்பது உண்மை. பெரும்பாலும் தனியார்களே பயிற்சிப் பள்ளிகளை நடத்துகின்றனர். இவர்களுக்கும் போதிய பயிற்சி இல்லை. ஆட்டிஸம் குறைபாடு உள்ள குழந்தைகளை எப்படிக் கையாள்வது என்பதனைப் பெற்றோர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கான பயிற்சியை நாங்கள் இலவசமாக அளிக்கிறோம்.
- டாக்டர் ஜி. ராஜமோகன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT