Published : 15 Apr 2016 02:09 PM
Last Updated : 15 Apr 2016 02:09 PM
கருத்துப் பேழை பகுதியில் இந்த வாரம் வெளியாகிவரும் திருமாவளவனின் பேட்டி மிகச் சிறப்பானது. இதுபோன்ற அர்த்தமுள்ள, செறிவான பேட்டியைச் சமீப காலங்களில் எந்தப் பத்திரிகைகளும் இதழ்களும் வெளியிடவில்லை. ஆழமான கேள்விகளும் ஆழமான பதில்களும் பேட்டியை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார உரிமைகளையும், தமிழகத்தில் கூட்டாட்சியின் தேவையையும் திருமாவளவன் வெளிப்படுத்திய விதம் அருமை. இரு முக்கிய தலைவர்களின் பழகும் விதம் பற்றிய பதில் பல உள்கேள்விகளை உள்ளடக்கியது. சித்தாந்தங்கள் அரிதாகிக்கொண்டிருக்கும் தற்போதைய அரசியல் சூழலில், நம்பிக்கை தரும் தலைவராகத் திருமாவளவன் தெரிகிறார்.
- விளதை சிவா, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT