Published : 04 Apr 2016 11:18 AM
Last Updated : 04 Apr 2016 11:18 AM
தண்ணீர் பற்றாக்குறையும் அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் விளக்கி அற்புதமாக எழுதப்பட்டுள் ளது ‘தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க வழிகளா இல்லை!; தலையங்கம். வருங்கால தண்ணீர்ப் பஞ்சத்தை மனதில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கப்பட்ட வழிமுறைகளை அரசு ஆராய்ந்து, திட்டங்களை வகுத்து துரிதமாகச் செயல்படுத்தினால் மக்கள் தண்ணீருக்காக அலையவும் மாட்டார்கள், சண்டை போட்டுக்கொள்ளவும் மாட்டார்கள்.
- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).
வெல்லும் வன்முறை
இடஒதுக்கீடு தொடர்பான ‘ஜாட் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவர ஹரியாணா அமைச்சரவை ஒப்புதல்’ என்ற செய்தியைப் படித்தேன். இடஒதுக்கீடு என்பது காலங்காலமாய் அழுத்தப்பட்ட ஒரு சமூகத்தைக் கைதூக்கிவிடுவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டபூர்வ உரிமை. ஆனால், அதனை உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தின் மூலம் பெறுகிறார்கள் என்றால், வன்முறை வென்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
- சுரேஷ், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.
சுவாரஸ்யமான பதிவு
சுவாரஸ்யமாக இருந்தது ‘எனது முதல் தேர்தல் தோல்வி’ கட்டுரை. பெரியவர்கள் முனைப்புடன் ஈடுபடும் தேர்தல்கள், சிறுவர்களுக்கு எப்போதும் வேடிக்கையான விஷயமாகவே இருந்திருக்கின்றன. அதேசமயம், வீட்டுப் பெரியவர்களின் உரையாடல்களின் மூலம் அரசியல் கட்சிகளைப் பற்றியும், அரசியல் தலைவர்களைப் பற்றியும் சில கருத்துகள் இளம் வயதிலேயே உருவாகிவிடும். இவை அனைத்தையும் அழகாகத் தொகுத்து எழுதிய கட்டுரையாளர் மு.இராமனாதன் பாராட்டுக்குரியவர்.
- நடேசன், மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT