Published : 20 Apr 2016 11:33 AM
Last Updated : 20 Apr 2016 11:33 AM
ஜெயலலிதாவின் மக்களாட்சி விரோதப் போக்கை மிகத் தெளிவாகவும், துணிச்சலாகவும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார், ‘ஜனநாயகம் யார் கையில்?’ என்ற கட்டுரையின் ஆசிரியர். நாட்டில் அச்சு ஊடகத் துறை எந்த அளவுக்கு நடுநிலையோடு செயல்படுகிறதோ அந்தளவுக்குத்தான் மக்களாட்சி வலிமையோடு திகழ முடியும். அந்த வகையில் ‘தி இந்து’நாளிதழ் முதலிடம் வகிக்கிறது. ஒரு ராணியைப் போல ஜெயலலிதா மேடையில் வீற்றிருக்கும் புகைப்படத்தையும், அதன் அருகிலேயே தேவாலயத்தின் வாசல்படியில் சாதாரண மனிதராக உட்கார்ந்திருக்கும் உம்மன் சாண்டி புகைப்படத்தையும் வெளியிட்டு இருப்பது பாராட்டுக்குரியது.
கட்டுரையின் முடிவில் ‘ஜனநாயகம் என்றால், என்ன என்பதை ஜெயலலிதாக்கள் மறக்கும்போது அதை உணர்த்த வேண்டிய பொறுப்பு ஷிவானிகள் கையிலேயே இருக்கிறது’ என்று முடித்திருக்கிறார். கட்டுரையாளரின் கூற்றுக்கேற்றவாறு, முதுகெலும்பை முற்றிலும் இழந்துவிட்ட அடிமைத் தமிழகத்தில் ஷிவானிகள் உருவானால்தான் தமிழகம் தலைநிமிரும்!
- பொ.நடராசன், நீதிபதி (பணி நிறைவு), மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT