Published : 05 Apr 2016 11:28 AM
Last Updated : 05 Apr 2016 11:28 AM
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடும் சமத்துவ குணத்தைச் சிறு வயது முதலே கொண்டிருந்த திருமாவளவனின் அந்த உணர்வு, இன்றும் நீர்த்துப்போகாமல் உயிர்ப்புடனே இருக்கிறது. ‘உருவானார் திருமாவளவன்’ கட்டுரை, இலங்கைப் பிரச்சினைக்காக எடுத்த போராட்டங்கள், தலித் மக்கள் ஏற்றத்துக்காகத் தனித்து நின்று போராடும் கொள்கைப் பற்று, மற்றும் அவரது பேச்சாற்றல், எழுத்தாற்றல், இலக்கிய - சமுதாயப் பார்வை, அவரது பன்முகத் திறமை என எல்லாவற்றையும் பட்டியலிட்டிருந்தது. திருமாவின் வாழ்க்கை ஒரு குறிக்கோளை நோக்கியது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தவிதம் அருமை.
- கு.மா.பா. கபிலன், சென்னை
திருந்துமா தேர்தல் ஆணையம்?
தொல்.திருமாவளவன், ‘தேர்தல் ஆணையம் வெறுமனே தேர்தலை நடத்துகிற ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக இருக்கிறதே தவிர, பணம் கொடுப்பதையும், சமூக விரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் வலிமையுடையதாக இல்லை’ என்று கூறியிருப்பது உண்மையே. மற்ற அரசுத் துறைகளைப் போலவே தேர்தல் ஆணையமும் எளியவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கிறது. இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா?
- ஆறுமுகநாதன், தூத்துக்குடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT