Published : 19 Apr 2016 10:46 AM
Last Updated : 19 Apr 2016 10:46 AM

மக்களைக் கவனியுங்கள்

வெயில் தாழ்ந்த பின் மாலை வேளையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினால் என்ன என்று தோன்றியது, ‘ஜெயலலிதாவைப் பார்க்க அருப்புக்கோட்டையில் 6 மணி நேரம் வெயிலில் தவித்த பெண்கள்’ செய்தியைப் படித்தபோது. காசு கொடுத்து அழைத்துவந்துவிட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை உயிர் போகும்வரை வெயிலில் போட்டு வாட்டியெடுப்பது, மனிதத்தன்மையற்றது என்பதை அரசியல்வாதிகள் உணர்வார்களா?

- யோவான், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.



உம்மன் சாண்டி ஒரு காட்சிப்பிழை?

உம்மன் சாண்டி போன்ற முதல்வர்கள் வாழும் நாட்டில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை நம்ப முடியவில்லை. ஆடம்பரம், அதிகாரத் தோரணையுடன் வலம்வரும் நம்மூர் அரசியல் பிரதிநிதிகளைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு அது ஒரு காட்சிப்பிழையாகவே தோன்றுகிறது. ‘உங்களால் நான், உங்களுக்காக நான்’ எனச் சொல்லிவிட்டு, ‘உங்களில் ஒருவன் நான்’ என்பதை மறந்து, தன் தொண்டர்களையும் மக்களையும், சக ஊழியர்களையும் தூரமாக நிறுத்திவைப்பது அவர்களைப் பரிகசிப்பது போன்றது எனும் கூற்றும், இதுகுறித்த கட்டுரையாளரின் உளவியல் ரீதியான பார்வையும், நடுநிலையாளர்களின் மனசாட்சியையே பிரதிபலிக்கிறது.

- ந.குமார், திருவாருர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x