Published : 11 Apr 2016 11:34 AM
Last Updated : 11 Apr 2016 11:34 AM
நாடு முழுவதும் வறட்சி தாண்டவமாடும்போது, கிரிக்கெட் மைதானத்தைப் பராமரிக்க தண்ணீரை வீணடிப்பதற்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது நீதிபதிகளின் சமூக அக்கறையின் மீதான வெளிப்பாட்டைக் காட்டுகிறது. அதே அக்கறையுடன் கோயில்களில் அபிஷேகம் என்ற பெயரில் உணவுப் பண்டங்கள் வீணடிப்பதற்கும் தடை விதிப்பது மிகத் தேவையான ஒன்று.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
வளர்பிறை அன்புமணி
தென்னாற்காடு மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்தின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவராக, கடமை வழுவாத நல்ல மருத்துவராக, தனிமனித ஒழுக்கத்தின் உதாரணமாக, பசுமைத் தாயக அமைப்பின் தலைவராக, மாநிலங்களவை உறுப்பினராக, மத்திய சுகாதாரத் துறையின் அமைச்சராக இப்படி, படிப்படியாகப் பொதுவாழ்வில் முன்னேறியவர் அன்புமணி ராமதாஸ் என்பதை, ‘உருவானார் தலைவர்’ கட்டுரை வழியாக அறிந்தேன். கல்வி, பேச்சாற்றல், சிந்தனைத் தெளிவு, திட்டமிடும் திறமை ஆகிய பல தகுதிகள் இருப்பதாலும் மது, புகை, போதைப் பொருட்களை ஒழிப்பதில் அக்கறை காட்டுவதாலும், அன்புமணியின் மீது மக்களுக்கு நம்பிக்கை பெருகிவருவது உண்மையே.
ஆனால், இவை மட்டுமே ஒருவரை முதல்வர் ஆக்கிவிடுமா என்பதும், இப்போது வளர்பிறை நிலையில் உள்ளவர் முழுமதியாக அவரது வார்த்தைகள் செயலாக்கம் பெறவேண்டும் என்ற கட்டுரையின் கடைசி வாக்கியம் சிந்திக்க வைக்கிறது!
- கு.மா.பா.கபிலன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT