Published : 01 Apr 2016 10:50 AM
Last Updated : 01 Apr 2016 10:50 AM

(ஏ)மாற்றம்

தமிழகத்தில் இடதுசாரிகள் அரசியல் எந்த அளவுக்கு ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கிறது என்பதை படம் பிடித்துக்காட்டியிருக்கிறது, ‘மாற்றம்: சீரழிவுகளிலிருந்து பேரழிவுக்கு!' என்ற கட்டுரை. இது நிதர்சனமான உண்மையும்கூட! எம்ஜிஆரின் சினிமா கவர்ச்சிக்கு அரசியல் சாயம் பூசி, அவருக்கு ஒரு அரசியல் அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்த இந்த இடதுசாரிகள் தற்போது விஜயகாந்தின் சினிமா கவர்ச்சி அரசியலைப் பயன்படுத்த முற்பட்டிருப்பதைப் பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டியிருக்கிறது.

இந்த இடதுசாரிகளின் அரசியல் வளர்ச்சிக்கு இது போன்ற நடவடிக்கைகள்தான் தடைக்கற்களாக இருக்கின்றன. தந்தை பெரியார் அன்று சொன்னார், ‘இந்தியாவில் கம்யூனிசம் பரவாமல் இருக்கும்படி இந்திய கம்யூனிஸ்ட்டுகள் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்’ என்று. அன்று பெரியார் சொன்ன சொல் இன்றும் உண்மையாக உலவிக்கொண்டிருக்கிறது என்பதுதான் நமக்கு வியப்பை தருகிறது.

பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு), உலகனேரி, மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x