Published : 25 Apr 2016 10:37 AM
Last Updated : 25 Apr 2016 10:37 AM
மொழிபெயர்ப்புகளைக் கொண்டாடுவோம் கட்டுரை அருமை. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரத்தை மொழிபெயர்க்கும் பாரதியின் கனவு நனவாகியிருக்கிறது. மொழிபெயர்க்கும்போது மூல நூலின் அழகியலை அப்படியே தருவது கடினம். இதில் மொழிபெயர்ப்பாளர் பங்கு அளப்பரியது. ராகுல் சாங்கிருத்யாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தை எழுதும்போதே தமிழில் மொழி பெயர்த்தவர் கண.முத்தையா என்பது ஆச்சர்யமளிக்கிறது. தரமான புத்தகங்களின் பட்டியலைத் தேர்ந்த எழுத்தாளர்களைக் கொண்டு வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி. ‘அறிவை விரிவு செய், அகண்டமாக்கு’ என்ற பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்பப் பயணிக்கிறது ‘தி இந்து’. வாழ்த்துக்கள்!
- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT