Published : 07 Apr 2016 09:51 AM
Last Updated : 07 Apr 2016 09:51 AM

ஆதார் பெருமை

ஆதார் அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தொடுகிறது என்ற செய்தியைப் படித்து மகிழ்ந்தேன். ஆனாலும் அத்துமீறல்கள் செய்பவர்களைக் கண்டுபிடிக்க முடியாத நிலை வருந்தத் தக்கது. ஒரே குடும்பத் தலைவருக்குப் பல குடும்ப அட்டைகள் இருப்பது, ஒரு குடிமகனின் பெயர் இரண்டு, மூன்று இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது போன்றவை ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுவிட்டால் பெருமளவு குறையும்.

- கு.மா.பா. கபிலன், சென்னை.



இதயம் திறக்குமா?

மதம் அன்பை சொல்லித் தருவதாகவே சொன்னாலும், நடைமுறையில் அது அப்படி இல்லை என்பதையே ‘நம் கைகளில் குழந்தைகளின் ரத்தம்’ கட்டுரை உணர்த்துகிறது. பயங்கரவாதிகள் எங்களை ஏன் கொல்கிறார்கள் என்ற அந்தக் குழந்தையின் வினாவுக்கு விடை கூற அவர்களால் முடியாது. ‘நம்முடைய குழந்தைகளுக்குக் குயில் குஞ்சுபோல அகலமாக வாயைத் திறக்க முடியாமல் போயிருக்கலாம். அதிகமாகக் கத்தத் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால், அதிகமாக ரத்தம் சிந்துகின்றன. அதற்காகவாவது நம் இதயம் திறக்குமா?’ என்ற வரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு மாற்றத்தை உருவாக்கும்.

- முகம் மோகன், பாபநாசம்.



தலை சுற்றுகிறது

கிரானைட் முறைகேடு விவகாரத்தில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் தலைசுற்ற வைக்கின்றன. ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பாடுவதைப் போல ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே; என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது’ என்று கத்திக்கொண்டு ஓட வேண்டும்போல் இருக்கிறது.

- தா. சாமுவேல் லாரன்ஸ், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x