Published : 20 Apr 2016 11:31 AM
Last Updated : 20 Apr 2016 11:31 AM
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக நல்ல பெயர் எடுத்த மோடியால், ஒரு நாட்டின் பிரதமராக ஏன் நல்ல பெயர் எடுக்க முடியவில்லை என்பதை நன்றாக அலசி ஆராய்கிறது ‘விளக்க முடியாத மோடியின் மாற்றம்’ கட்டுரை. சிறப்பாகப் பேசும் திறமை கொண்டவர் மோடி. அவருடைய பேச்சுத் திறமையால் பேசிப் பேசியே பிரதமராகிவிட்டார்.
ஆனபின், ‘நாளொரு நாடு; பொழுதொரு கோஷம்’ என தன்னை முன்னிறுத்திப் பேசுகிறாரே தவிர, தான் தலையிட்டுத் தீர்த்து வைக்க வேண்டிய வகுப்புக் கலவரம், சாதி மோதல்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்கள் போன்றவற்றில் தலையிடாமல் மவுனம் சாதிக்கிறார் மோடி. அவர் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டும்.
- அ.ஜெயினுலாப்தீன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT